இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர் ஆகிய தளங்களில் இயங்கி வரும் மிஷ்கின், தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். எப்போதுமே திரைப்பட விழாக்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வரும் அவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சொன்ன கருத்துகளும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவர் கூறுகையில், ‘இதுவரை நான் நித்யா மேனன் நடித்த எந்த படத்தையும் பார்த்தது இல்லை.
ஆனால், அவரை வைத்து படம் இயக்கியுள்ளேன். அதுபோல், விஷால் நடித்த எந்த படத்தையும் பார்த்தது இல்லை. ஆனால், அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனால், விஜய் சேதுபதி நடித்த ‘கடைசி விவசாயி’, ‘மாமனிதன்’ ஆகிய படங்களை நான் பார்த்திருக்கிறேன். நான் இயக்கும் ‘டிரெயின்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்’ என்றார். இதன்மூலம் மிஷ்கின் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியாமல் நெட்டிசன்கள் குழம்பியுள்ளனர்.