கலைக்கு மரியாதை ஏற்படுத்தியவர் இளையராஜா: ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: சமீபத்தில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் இசை அமைப்பாளர் இளையராஜா குறித்து அவர் கூறியதாவது: இளம் வயதில் இளையராஜாவிடம் நான் உதவியாளராக பணியாற்றினேன். அப்போது சிலர் குடிப்பார்கள். அவர்களை வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்க ஒரு ஆள் தேவைப்படும். ஆனால், அப்படி இருந்த சூழலை மாற்றி, ஒட்டுமொத்த கலைக்கும் தனி மரியாதை ஏற்படுத்தியவர் இளையராஜா. நிச்சயமாக அவரது இசையை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இசையையும் தாண்டி எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த ஒரு விஷயம் அது. ‘இளையராஜாவிடம் நீ வாசிக்கிறாயா!?’ என்று பலர் கேட்கும் வகையில் ஒரு மரியாதையை அவர் கொண்டு வந்தார்.

Related Stories: