×

விவசாயத்தில் சாதித்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம்: கார்த்தி வழங்கினார்

சென்னை: விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். மேலும் இந்நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது.

இதில் சிறந்த பெண் வேளான் தொழில் முனைவோர் விருது சுகந்திக்கும் நீர்நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது சியாமளாவுக்கும் மாபெரும் வேளான் பங்களிப்புக்கான விருது கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கும் கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்கான விருது கால்நடை மருத்துவர் விஜயகுமாருக்கும் சிறந்த பெண்கள் வேளான் கூட்டமைப்புக்கான விருது நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த ஆண்டு விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழவர் விருதோடு இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

Tags : Karthi ,Chennai ,Farmer Awards 2025 ,Uzhavan Foundation ,Arvind Swamy ,Saranya Ponvannan ,Mari Selvaraj ,
× RELATED அகரம் அலுவலகம் என் வருமானத்தில்தான் கட்டினேன்: சூர்யா விளக்கம்