×

காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை

மல்லுவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்த ஹீரோயின்களில், மருத்துவம் படித்து முடித்த ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். சாய் பல்லவி மாதிரி மருத்துவம் படித்துவிட்டு மாடலிங் செய்ய ஆரம்பித்தார். அப்படியே திரைத்துறைக்கும் வந்தார். மலையாளப் படங்களில் குறைந்த சம்பளம் வாங்கி நடித்த அவர், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆக்‌ஷன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு, தனுஷுடன் நடித்த ‘ஜகமே தந்திரம்’ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

பிறகு ஆர்யாவுடன் ‘கேப்டன்’ படத்தில் நடித்தார். தன்னை தேடி வந்த எல்லா படங்களையும் ஒப்புக்கொள்ளாத ஐஸ்வர்யா லட்சுமி, நல்ல கதாபாத்திரம் என்றால் மட்டுமே நடிக்க கால்ஷீட் கொடுத்தார். அப்போது சாய் பல்லவியுடன் அவர் நடித்த ‘கார்கி’ என்ற படத்தை இணைந்து தயாரித்தார். விஷ்ணு விஷால் மனைவியாக அவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ படம் அவரது சிறப்பான நடிப்பு வெளிப்படுத்தியது. பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் 2 பாகங்களிலும் அவரது நடிப்பு சூப்பராக இருந்தது.

‘பொன் ஒன்று கண்டேன்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவர் சிம்புவுக்கு ஜோடியா என்பது சஸ்பென்ஸ். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, கதையின் நாயகனாக சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்திலும் சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

இந்நிலையில் அவருக்கும், அவரது நெருங்கிய நண்பர் அர்ஜூன் தாஸுக்கும் இடையே ரகசிய காதல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை இருவரும் மறுத்து, ‘நாங்கள் இருவரும் சக நடிகர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே. எங்களிடையே காதல் இல்லை’ என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தனர்.

Tags : Aishwarya Lakshmi ,Kollywood ,Malluwood ,Sai Pallavi ,Sundar.C… ,
× RELATED சூரி நடிக்கும் மாமன் பர்ஸ்ட் லுக் வெளியீடு