சென்னை: மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு ஹீரோவாக நடித்துள்ள படம், ‘எமன் கட்டளை’. ஏ.கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்ய, என்.எஸ்.கே இசை அமைத்துள்ளார். சினேகன் பாடல்கள் எழுதியுள்ளார். ‘குண்டான் சட்டி’ பட ரிலீசுக்கு பிறகு செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பில் டாக்டர் எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரித்துள்ளார். வி.சுப்பையன் கதை, வசனம் எழுதியுள்ளார். முக்கிய வேடங்களில் சந்திரிகா, அர்ஜூனன், நளினி, ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, வையாபுரி, டாக்டர் சீனிவாசன், அனுமோகன், மதன்பாப், சங்கிலி முருகன், கராத்தே ராஜா நடித்துள்ளனர்.
திரைக்கதை எழுதி எஸ்.ராஜசேகர் இயக்கியுள்ளார். நண்பர்களின் தவறான செயலால் பெண்ணின் திருமணம் நின்றுவிடுகிறது. இதனால் அவளும், தந்தையும் விஷம் குடிக்கின்றனர். இதையறிந்து மனம் வருந்திய அன்பு, தற்கொலை செய்துகொண்டு எமலோகம் செல்கிறார். அங்கு அவருக்கு எமதர்மராஜா ஒரு கட்டளையிடுகிறார். அது என்ன என்பது கதை. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.