×

ராஷ்மிகா படுகாயம்: படப்பிடிப்பு ரத்து

மும்பை: ராஷ்மிகா தற்போது இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், சத்யராஜ், காஜல் அகர்வால் நடிக்கும் ‘சிக்கந்தர்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில், வழக்கமாக ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராஷ்மிகா மந்தனா, எதிர்பாராவிதமாக படுகாயம் அடைந்தார்.

இதனால், அவர் பங்கேற்று நடிக்க வேண்டிய ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து ராஷ்மிகா மந்தனா தரப்பில் விசாரித்தபோது, ‘தற்போது ராஷ்மிகா நன்கு குணமடைந்து வருகிறார். டாக்டர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வரும் அவர், விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்’ என்று தெரிவித்தனர். ராஷ்மிகா மந்தனா குணமடைய வேண்டி நெட்டிசன்களும், ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.

Tags : Rashmika ,Mumbai ,A.R. Murugadoss ,Salman Khan ,Sathyaraj ,Kajal Aggarwal ,
× RELATED பட விழாவுக்கு வீல் சேரில் வந்த ராஷ்மிகா