நற்கருணை உடையோன் நரசிம்மன்

ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணாநதி தீரத்தில் ‘‘வாடப்பல்லி’’ என்று ஒரு நரசிம்ம க்ஷேத்திரம் உள்ளது. அழகிய லக்ஷ்மி நரசிம்மர் இங்கு கோயில் கொண்டிருக்கிறார். இந்த ஆலயத்துக்கு தீபாலயம் என்று பெயர். இந்த பெருமாளை ‘‘தீபாலய்யா’’ என்றும் ‘‘ஞானச் சுடர்’’ என்றும் போற்றுவார்கள். இவரது முகத்துக்கு நேராகவும், திருவடிக்கு நேராகவும் இரண்டு தீபங்கள் சுடர் விட்டு பிரகாசிக்கும்... திருவடிக்கும் நேராக இருக்கும் தீபம் ஆடாமல், அசையாமல் சுடர் விடும். ஆனால் முகத்துக்கு நேராக உள்ள தீபம் சுவாமியின் மூச்சுக் காற்றால் தீபச்சுடர் இப்படியும், அப்படியும் ஆடிக் கொண்டிருக்கும். இந்த அதிசயம் இன்றும் வாடப்பல்லியில் நடைபெறுகின்றது.  

   

நான்கு அவதார நரசிம்மர்

காஞ்சிபுரம் அருகில் உள்ள வாலாஜாபாத்திற்கு அருகில் இருக்கும் தலம் கட்டவாக்கம். இத்தலத்தில் ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோயில் இருக்கிறது. இப்பெருமான் நான்கு அவதாரங்கள் ஒருங்கே கொண்ட கோலத்துடன் அருட்பாலிக்கிறார். அதாவது கூர்மம், வராகம், ஸ்ரீராமர், கிருஷ்ணர் என்கிற நான்கு அவதாரங்களையும் ஒருங்கே கொண்டவராக விளங்குகிறார். இவரை வணங்கினால் நான்கு அவதாரங்களையும் ஒரு சேர தரிசித்த பலனை அடையலாம்.தொல்லையை தடுக்கும் மனித வடிவ நரசிம்மர் திண்டுக்கல் அருகில் உள்ள வேடசந்தூரில் சிம்ம முகம் இல்லாத அர்ச்சாவதார (மனிதர்களின் வழிபாட்டிற்குரிய வடிவம்) வடிவத்துடன் இவர் அருட்பாலிக்கிறார்.

இரணியனை வதம் செய்வதற்காக சிம்ம முகம், மனித உடலுடன் மகாவிஷ்ணு ஒரு தூணில் இருந்து வெளிப்பட்டார். மனிதனை நான் என்பர். அத்துடன் சிங்கமாகிய சிம்மத்தின் முகமும் இணைந்தால் நரசிம்மர். முற்காலத்தில் நரசிம்ம பக்தர்கள் சிலர் தங்கள் பகுதியில் நரசிம்மருக்கு கோயில் கட்ட விரும்பினர். எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்கு தெரியவில்லை. இவ்வேளையில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படியே பக்தர்கள் கோயில் எழுப்பினர். பக்தர்களின் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, சிங்கமுகம் இல்லாமல், மனிதமுகத்துடன் காட்சி தந்ததால், பக்தர்கள் அதே அமைப்பிலேயே சிலை வடித்தனர்.

ஆனால் சுவாமிக்கு நரசிம்மர் என்று பெயர் சூட்டினர். பத்ம விமானத்தின் கீழ் சுவாமி, சங்கு, சக்கரத்துடன் அபயவரத முத்திரைகள் காட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள ஒரு தூணில் புடைப்புச் சிற்பமாக சிவலிங்கம் உள்ளது. குடகனாறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம். கார்த்திகை, பவுர்ணமியன்று விசேஷ பூஜை நடக்கும். ஆயுள் அதிகரிக்க, திருமணத்தடை நீங்க சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இவரை வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒழியும், உடல்நலம் உண்டாகும்.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Related Stories: