கருப்பட்டி மிட்டாய்

தேவையான பொருட்கள்

அரிசி - 1 கப்

கருப்பட்டி - 2 கப்

முழு உளுந்து - ¼கப்

ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

சுக்குத் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க

நீர் - 1 கப்

செய்முறை  

முதலில் அரிசி மற்றும் பருப்பை எடுத்துக் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்பு அதனுடன் நீர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி ஊறியதும் அதனை வடிகட்டி மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து 30 நிமிடம் - 1 மணி நேரம் வரை தனியே வைக்கவும். பின்பு கருப்பட்டியை உடைத்து ஒரு பானில் எடுத்துக் கொள்ளவும்.சிறிது நீர் சோ்க்கவும். நன்கு கலக்கி கருப்பட்டி கரையும் வரை கொதிக்க வைக்கவும். பின்பு அதனை வடிகட்டிக் ஒரு பானில் விடவும். சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். பின்பு அதனுடன் ஏலக்காய் தூள், சுக்குத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு தீயை குறைத்து வைக்கவும். பின்பு பைப்பிங் பேக்கை எடுத்துக் கொள்ளவும். அதனுள் மாவை நிரப்பி அதனை மூடியால் மூடவும். பின்பு எண்ணெயில் மாவை  சுருள் சுருளாக விட்டு பொரித்தெடுக்கவும். பின்பு அதனை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். அதனை கருப்பட்டி கலவையில் போட்டு 2-3 நிமிடங்கள் ஊற வைக்கவும். கருப்பட்டி ஜவ்வு மிட்டாய்  பிரசாதம் தயார்.

Related Stories: