இந்த வாரம் என்ன விசேஷம்?

பிப்ரவரி 22, சனி : திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. ராமேஸ்வரம் கோயிலில் தேரோட்டம்.

பிப்ரவரி 23, ஞாயிறு : அமாவாசை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் லட்ச தீபக் காட்சி. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் பவனி.

பிப்ரவரி 24, திங்கள் : சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

பிப்ரவரி 25, செவ்வாய் : சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருக்கண்டியூரில் பகல் 5 நாழிகைக்கு சூரிய பூஜை.

பிப்ரவரி 26, புதன் : திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். கோயம்புத்தூர் ஸ்ரீ கோனியம்மன் புலி வாகனத்தில் திருவீதியுலா.

 

பிப்ரவரி 27, வியாழன் : சதுர்த்தி விரதம். ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். ஆராதனை, வழிபாடு செய்ய நன்று. சென்னை திருவெற்றியூர் ஸ்ரீ வடிவுடையம்மன் கோயில் ஸ்ரீ கணேசர் உற்சவம்.

பிப்ரவரி 28, வெள்ளி : பஞ்சமி. காங்கேயநல்லூர் ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவம். சூரியப் பிரபையில் பவனி. திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். திருச்சி நாகநாதர் கும்பகோணம், திருமழபாடி ஸ்ரீ வாஞ்சியம் மாசிமக உற்சவ ஆரம்பம்.

Related Stories: