×

மகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் எப்பொருளால் அபிஷேகம் செய்யலாம்?

சிவனுக்கு உரிய நாளான மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால், கஷ்டங்கள் நீங்கி சுகமுடன் வாழலாம். எந்த ராசிக்காரர்கள் என்ன பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் சிவனின் அருளை முழுமையாக பெறமுடியும் இதோ...

மேஷ ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்குப் படைத்து, சிவ பஞ்சாட்சர மந்திரத்தை சொன்னால் நினைத்தது நடக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள், தயிரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், பணப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

மிதுன ராசிக்காரர்கள், சிவலிங்கத்தை கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால், எண்ணியது நிறைவேறும்.

கடக ராசிக்காரர்கள், சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் நினைக்கும் காரியம் விரைவில் நடக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள், சிவப்பு சந்தனம் கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் அதிர்ஷ்டம் அடிக்கும்.

கன்னி ராசிக்காரர்கள் பால் கொண்டு சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால் உடல்  ஆரோக்கியம் கிட்டும்.
 
துலாம் ராசிக்காரர்கள், பசு மாட்டுப் பாலால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், நல்ல செல்வ செழிப்பு கிடைக்கும்.

விருச்சிக ராசிக்காரர்கள், தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வெற்றி கிட்டும்.

தனுசு ராசிக்காரர்கள், குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாட்சர மந்திரத்தைப் படித்தால் இன்னல்கள் நீங்கும்.

மகர ராசிக்காரர்கள், சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ பழத்தைப் படைத்தால், எதிலும் வெற்றிக் கிட்டும்.

கும்ப ராசிக்காரர்கள், இளநீர் அல்லது கடுகு எண்ணெய்யால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நிதி ஆதாயம், லாபம் கிடைக்கும்.
   
மீன ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று குங்குமப்பூ பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், பெரும் செல்வ செழிப்பு உண்டாகும்.

மகாசிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே நீராடிவிட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும். தொடர்ந்து, சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் நீராடிவிட்டு சிவபூஜை செய்ய வேண்டும்.   வீட்டிலேயே இதை மேற்கொள்ளலாம். அருகில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும் வழிபடலாம்.

பூஜையின் போது சிவாய நம என்ற மந்திரத்தை உச்சரிப்பது மனோசக்தியை கொடுக்கும். பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகச்சிறந்த பலனை தரும்.  நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, சிவனை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

- கோடம்பாக்கம் A.S.கோவிந்தராஜன்

Tags : Mahasivaratri ,
× RELATED நேபாளத்தின் பசுபதிநாத் கோவிலில்...