முருகன்மீது பாடப்பட்ட சிற்றிலக்கியங்கள்

தண்தமிழ் தெய்வமாக விளங்கும் முருகப்பெருமான் தமிழ்ப்புலவர்கள் அனேக நூல்களைப் பாடியுள்ளனர்.சங்ககாலப் பாடல்களில் பரிபாடல்,  திருமுருகாற்றுப்படை போன்றவை நேரடியாகவும் மற்றவை தேவைப்படும் இடங்களிலும் முருகன் புகழைப் பேசுகின்றன. இன்று வரை  காலங்காலமாகப் புலவர்கள் முருகன் மீது பலவிதமான பாடல்களைப் பாடிப் பரவியுள்ளனர். இவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல்  வகையில் அமைவது முருகனைப்பற்றி பொதுவில் அமைந்த பாடல்களான திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்றவைகளாகும் இதில் குறிப்பிட்ட  தலம் என்றில்லாமல், அனைத்துத் தலங்களுக்கும் உரிய அனைத்து செய்திகளையும் தாங்கி இருப்பதாகும். இரண்டாவது வகையில் அமைவது  குறிப்பிட்ட தலங்கள் மீது பாடப்படுவது. சுவாமிமலை, நாகை மெய்கண்ட வேலாயுதர் போன்ற குறிப்பிட்ட தலங்களில் கோயில் கொண்டுள்ள  முருகன்மீது பாடப்பட்டதாகும்.

மூன்றாவது வகையில் அமைவது சிவாலயங்களில் பரிவாரமாக வீற்றிருக்கும் முருகன் மீது பாடப்பட்ட பனுவல்களாகும். இதில் குறிப்பிட்டத்தக்கதாக  நூல் திருப்புகழாகும். முருகனின் அருள் பெற்ற அருணகிரி நாத சுவாமிகள் தமக்கு முன்னால் சிவன் அருள் பெற்று திருத்தல யாத்திரை மேற்  கொண்டு தலங்கள் தோரும் சென்று பரமனைப் பாடி மகிழ்ந்த அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரைப் போலவே தாமும்தலயாத்திரை மேற்கொண்டார்.தலங்கள் தோறும் சென்று முருகனைப் பாடினார். முருகனுக்கென தனி ஆலயங்கள் இல்லாத போது அத்தலத்தில்  இருக்கும் சிவாலயத்திலுள்ள பரிவார மூர்த்தியை பாடிப் பரவினார்.

இதனால் பல தேவாரப் பாடப் பெற்ற தலங்கள் திருப்புகழ் பெற்றதலங்களாகவும் புகழும் பெருமையும் பெற்றன.பாடல் பெறாத பல சிவதலங்களுக்கும்  பயணித்த அருணகிரிநாதர் அத்தலத்தில் பரிவார மூர்த்தியாக இருக்கும் முருகனைப் பாடிப்பரவியுள்ளார் எடுத்துக் காட்டாகவிரிஞ்சிபுரம் போன்ற புகழ்  பெற்ற சிவத்தலங்கள் தேவாரப் பாடல் பெறாதபோதும்திருப்புகழ் பெற்று பெரும் புகழுடன் இருப்பதைக் காண்கிறோம். பல சிவாலயங்களில் இருக்கும்   பரி வார முருகன் மீது புலவர்கள் சிற்றிலக்கியங்களை பாடியுள்ளனர். இவற்றில் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருவிரிஞ்சை முருகன்  பிள்ளைத் தமிழ் முதலானவை புகழ்பெற்ற நூல்களாகும்.இவை தவிர வழி நடை சிந்து, பதம், மாலைகள், விருத்தம், பதிகம், பதிற்றுப்பத்து அந்தாதி  ஓடம் என அனேக நூல்கள் பரிவார ஆலயத்து முருகன்மீது பாடப்பட்டுள்ளன.

ஆட்சிலிங்கம்

Related Stories: