இந்த வாரம் என்ன விசேஷம்?

பிப்ரவரி 15, சனி : திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. திஸ்ரோஷ்டகா. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில் இன்று கர்ம வினைகள் நீங்க - சக்திதர ஸ்வாமி ஹோமம்.

Advertising
Advertising

பிப்ரவரி 16, ஞாயிறு:  காளஹஸ்தி, திருக்கோகர்ணம். சைலம், திருவைகாவூர் இத்தலங்களில் சிவபெருமான் உற்சவம். கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமானுக்குத் திருமஞ்சன சேவை. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில் இன்று பண பிரச்னைகள் நிவர்த்தியாக, வேலை வாய்ப்பு கிடைக்க - தச பைரவர் யாகம்.

பிப்ரவரி 17, திங்கள் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் புறப்பாடு. அன்வஷ்டகா. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில் இன்று பணம், தொழில் பிரச்னைகள் நீங்க - சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம்.

பிப்ரவரி 18, செவ்வாய் : சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு. காளஹஸ்தி சிவபெருமான் திருவீதியுலா. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில் இன்று பெண் சாபங்கள் அகல - நவகன்னி ஹோமம்.

பிப்ரவரி 19, புதன் : ஏகாதசி. வேதாரண்யம் சிவபெருமான் உற்சவாரம்பம். காரிய நாயனார் குருபூஜை. வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில் இன்று நீரிழிவு நோய்கள் அகல - மஹா தன்வந்திரி ஹோமம்.

பிப்ரவரி 20, வியாழன் : முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில் இன்று எதிரிகள் அகல - மன்யூ சூக்த ஹோமம்.

பிப்ரவரி 21, வெள்ளி : திருவோணவிரதம். பிரதோஷம். மகா சிவராத்திரி. ராமேஸ்வரம் வெள்ளி ரதம். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில் இன்று ஆரோக்யம் பெற - திருவோண ஹோமம்.

Related Stories: