நல்லதே நடக்காதா என்ற எண்ணமா? வியக்க வைக்கும் மாறுதல்களை தரும் சங்கு வழிபாடு

சிலரது வீட்டில் எந்த நல்ல காரியமும் நடக்காது. நடக்கிற எல்லாமே பிரச்சனையாக தான் இருக்கும். தொழில் தொடங்கினால் நஷ்டம் இருக்கும். தேவையில்லா வழக்குகள் வரும். கடன் பிரச்சனை இருக்கும். சேமிக்கவே முடியாத நிலை இருக்கும். திடீரென ஏற்படும் அவரச நிலைக்கு கூட கையில் காசு இருக்காது. இந்த நிலைக்கு காரணம் உங்கள் வீட்டில் நல்ல சக்திகள் இல்லாமல் இருப்பதே ஆகும். உங்கள் வீட்டிற்குள் நல்ல சக்திகளை நுழைய முடியாமல் தடுத்து கொண்டிருக்கும் தீய கட்டுகள் தான் காரணமாக இருக்கும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் அவற்றை ஒழித்து வீட்டிற்குள் நல்ல சக்தியான தெய்வ சக்தி மற்றும் உங்களது முன்னோர்களை வர வைத்து விடும்.

அவர்களின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும். வீடு சுபீட்சம் அடையும். நல்ல காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடந்தேறும். தடைப்பட்ட திருமணம், வீடு கட்டும் பணிகள், புதுப்பிக்கும் பணிகள், வேலை வாய்ப்பு என்று அனைத்தும் விரும்பியபடி நடக்கும். தடைகளை தகர்த்தெறியும் சக்தி வாய்ந்த வழிபாடு இது. இதனை பரிகாரம் என்று சொல்வதை விட வழிபாடு முறை என்று சொல்லலாம். வீட்டை சுற்றி இருக்கும் அத்துணை துஷ்ட வளையங்களையும் உடைத்துவிடும் ஆற்றல் கொண்டது சங்கு வழிபாடு. அப்படி பட்ட சங்கை எப்படி வைத்து முறையாக வழிபடுவது என்று இப்பதிவில் விரிவாக காண்போம் வாருங்கள். சங்கு வகையில் நிறைய வகைகள் இருக்கின்றன.

அவற்றில் எந்த வகையான சங்கையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். வலம்புரி அல்லது இடம்புரி சங்கையும் எடுத்து கொள்ளலாம். அளவில் மிதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். சிறியதாக இருந்தால் வழிபாட்டிற்கு உகந்ததாக இருக்காது. நடுவில் துளை இருக்கும் காந்தகம் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். பின்னர் செம்பு தகடு ஒன்றை சதுரமாக வெட்டிக் கொள்ளுங்கள். இந்த செம்பு தகட்டின் ஒரு முனையில் நடுவில் சிறிய தட்டு ஒன்றை வைத்து கொள்ளுங்கள். தட்டு எந்த உலோகத்தால் வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த தட்டின் மேல் காந்தகம் வைக்க வேண்டும். காந்தகத்தின் நடுவில் கீழே உள்ள படத்தில் இருக்கும் வகையில் சங்கை வைக்க வேண்டும்.

இம்மூன்றும் ஒன்றை விட்டு ஒன்று விலகி நிற்க கூடாது. அதற்கு தகுந்தாற்போல் பசை ஏற்படுத்தி ஒட்டி வைத்து கொள்ளுங்கள். சங்கை தூக்கிப் பார்த்தால் தகடும் சேர்ந்து வர வேண்டும். சங்கின் திறந்த பகுதி கிழக்கு முகமாக இருக்குமாறு வைக்க வேண்டும். தகட்டின் மறுமுனையின் நடுவில் சங்கின் எதிராக விளக்கு வைக்க வேண்டும். விளக்கு அகல் தான் வைக்க வேண்டும் என்று இல்லை. எந்த வகையான விளக்காக வேண்டுமானாலும் வைக்கலாம். சங்கிற்கு தேவையானது விளக்கின் ஜோதி தான். சங்கின் மீது சுடர்விட்டு எரியும் தீபத்தின் ஒளி விழ வேண்டும். அவ்வளவு தான். இது தான் சங்கு வழிபாடுக்கு தேவையான அம்சங்கள். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம்.

எந்த எண்ணெய் கொண்டும் விளக்கு ஏற்றலாம். எந்த கட்டுபாடும் இல்லை. இதில் இருக்கும் காந்தகம், செம்பு தகடு, சுண்ணாம்பு சத்து நிறைந்த சங்கு அதன் மீது விழும் சுடர். இவையெல்லாம் ஒன்றிணையும் போது அதிர்வலைகள் உருவாகும். அந்த அதிர்வலைகள் வீட்டில் உள்ள துஷ்ட சக்திகளை தகர்த்தெறியும் ஆற்றல் பெற்றது. துஷ்ட சக்திகள் விலகி வழி விட்டால் நல்ல சக்திகள் வீட்டிற்குள் நுழையும். அதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மாறும். வியக்க வைக்கும் அளவிற்கு இதன் பலன்கள் அதிகம் இருக்கும். இல்லம் சகல வளங்கள் நிறைந்து நல்லறமாய் மாறிவிடும்.

Related Stories: