எதிரிகள் தொல்லைகள் நீங்க, உடல் ஆரோக்கியம் மேம்பட உதவும் ஆயுஷ் ஹோமம்

பஞ்சபூதங்களில் நெருப்பை போன்று ஒரு சக்தி வாய்ந்த பஞ்சபூத சக்தி எதுவுமில்லை. எதனாலும் மாசுபடாததும், எத்தகைய மாசுகளையும் சுட்டு பொசுக்கும் ஆற்றல் அக்னி எனப்படும் நெருப்பிற்கு உண்டு. எனவே தான் நமது முன்னோர்கள் நெருப்பை மூட்டி ஹோமங்களை வளர்த்து தீமைகளை நீக்கி நன்மைகள் உண்டாக பூஜைகளை செய்தனர். அப்படியான ஒரு ஹோமம் தான் ஆயுஷ் ஹோமம். இந்த ஆயுஷ் ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மனிதர்களுக்கு சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை தரும் தேவதை ஆயுர் தேவதையாகும். இந்த ஆயுர் தேவதையின் அருளாசிகளை பெறுவதற்கு செய்யப்படும் ஹோமம் ஆயுஷ் ஹோமம் ஆகும். ஆயுஷ் ஹோமத்தை வருடத்திற்கு ஒரு முறை தங்களின் இல்லங்களில் செய்வதால் வீடுகளில் இருக்கின்றன தீய சக்திகள் அனைத்தும் நீங்கி, அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு பல நன்மைகளை தருகிறது.

ஆயுஷ் ஹோமத்தை செய்வதற்கு ஹோம பூஜைகள் செய்வதில் அனுபவம் பெற்ற வேதியர்களிடம் ஒரு நல்ல நாளை குறித்து கொள்ள வேண்டும். உங்கள் பிறந்த நட்சத்திர தினத்தில் ஆயுஷ் ஹோமத்தை செய்வது சால சிறந்தது. இந்த ஹோம பூஜை செய்வதற்கு அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரமே சிறந்த நேரமாக இருக்கிறது. இந்த பூஜையில் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்வதால் அனைவரும் வாழ்வில் நன்மையான பலன்களை பெறலாம்.

அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை ஜெபித்து இந்த ஆயுஷ் ஹோமத்தை செய்வதால் உங்கள் வீடுகளில் இருக்கின்ற எதிர்மறை சக்திகள் அனைத்தும் நீங்கும். ஹோம பூஜை முடிந்த பிறகு ஹோம அஸ்தி மற்றும் பூஜை செய்யப்பட்ட குங்குமம், சந்தனம் பிரசாதம் தரப்படும். அதை உங்கள் பூஜையறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் திலகமிட்டு வர உங்களை பீடித்திருக்கும் அத்தனை தோஷங்களும் நீங்கும்.

ஆயுஷ் ஹோம பூஜை செய்வதால் உங்கள் குடும்பத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்கள் விரைவில் நல்ல குணம் பெறுவார்கள். எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். உங்களின் உயிர்க்கு ஏற்படவிருக்கின்ற கண்டங்கள், ஆபத்துகள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும். இனி வரும் காலங்களில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும்.

Tags : AYUSH HOMAM ,
× RELATED உடல்நலக்குறைவால் எஸ்ஐ சாவு