×

இந்த வாரம் என்ன விசேஷம்?

ஜனவரி 18, சனி :  குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

ஜனவரி 19, ஞாயிறு : திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாதஸ்வாமி வெண்ணையாற்று உற்சவம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மணலூர்பேட்டை தீர்த்தவாரி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.

ஜனவரி 20, திங்கள் : ஏகாதசி. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர், காந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.

ஜனவரி 21, செவ்வாய் :  சேங்காலிபுரம் ஸ்ரீமுத்தண்ணாவாள் ஆராதனை. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். வைஷ்ணவ ஏகாதசி.

ஜனவரி 22, புதன் : பிரதோஷம். காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள். மதுரை ஸ்ரீகூடலழகர் இத்தலங்களில் திருவாய்மொழித் திருநாள் உற்சவ சேவை. மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் ரிஷப சேவை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.

ஜனவரி 23, வியாழன் : மாத சிவராத்திரி. பழூர் ஸ்ரீகோவிந்த தாமோதர ஸ்வாமி ஆராதனை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. ஆருத்திரா அபிஷேகம்.  திருப்பதி ஸ்ரீஏழுலையப்பன் புஷ்பாங்கி சேவை.

ஜனவரி 24, வெள்ளி : தை அமாவாசை. திருவையாறு அமாதீர்த்தம், ஸ்ரீரங்கம், ஸ்ரீமத் ஆண்டவன் பிரக்ருதம் வராஹ மகாதேசிகன் திருநட்சத்திரம், ராமேஸ்வரம் ஸ்ரீராமர் வெள்ளி ரதம், திருநெல்வேலி நெல்லையப்பர் பத்ரதீபம். ஸர்வ சிவாலயங்களிலும் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அபிஷேகம். ஆருத்ரா தரிசனம்.

Tags :
× RELATED சூரியனின் மகள் திருமணம்