இந்த வாரம் என்ன விசேஷம்?

டிசம்பர் 14, சனி: பரசுராம ஜெயந்தி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

டிசம்பர் 15, ஞாயிறு: சங்கடஹர சதுர்த்தி. ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் குப்த கங்கையில் தீர்த்தம் கொடுத்து அருளல் மகா அவதார் ஸ்ரீபாபாஜி ஜெயந்தி. திருமெய்யம் ஸ்ரீசத்தியமூர்த்திப்பெருமாள் புறப்பாடு.

டிசம்பர் 16. திங்கள்: கார்த்திகை. ஐந்தாவது சோமவாரம் அவிநாசி ஸ்ரீலிங்கேஸ்வரர் கார்த்திகை தீப உற்சவக் காட்சி.

டிசம்பர் 17, செவ்வாய்: சர்வாலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை உற்சவாரம்பம். தனுர்மாத பூஜை ஆரம்பம்.

டிசம்பர் 18, புதன்: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

டிசம்பர் 19, வியாழன்: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் சகல ஜீவகோடிகளுக்கும் படி அளந்தருளிய காட்சி.

டிசம்பர் 20, வெள்ளி: சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குஜாம்பிகை புறப்பாடு.

Related Stories: