பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும்

பெரும்பாலான சிவாலயங்களில் வட கிழக்கு மூலையில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் பைரவர். தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆனாலும் மற்ற நாட்களில் பைரவரை வெவ்வேறு வகையில் வழிபடுவதன் மூலம் நாம் பல அறிய பலன்களை பெற முடியும். அந்த வகையில் செவ்வாய் கிழமை அன்று பைரவரை எப்படி வழிபட்டால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.

செவ்வாய் கிழமைகளில் மாலை நேரத்தில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுவது என்பது மிகவும் விசேஷமாகும். அதன் மூலம் நாம் இழந்த செல்வத்தினை மீண்டும் பெற முடியும். அதோடு வீட்டில் தேவையற்ற செலவுகள் ஏற்படாமல் இருக்கும். மேலும் தொழில் ரீதியாகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ வெளிநாடு சென்று அங்கேயே தங்கி இருப்பவர்கள் இந்த மிளகு தீபம் மூலம் நன்மை அடைவார்கள்.

மிளகு தீபம் ஏற்றும் முறை : ஒரு சிகப்பு துணியில் சிறிதளவு மிளகு போட்டு கட்டிவைத்துக்கொண்டு, அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, பின் அந்த அகல்விளக்கில் மிளகு மூட்டையை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றிய பிறகு பைரவரை மனதார நினைத்து வணங்க வேண்டும். இது போன்ற சமயங்களில் பைரவர் காயத்ரி மந்திரம் அதை ஜபிப்பது மேலும் சிறப்பு சேர்க்கும்.

Related Stories: