தாய்க்கு உயிர் கொடுத்த தனயன் பரசுராமர்

ஜமதக்னி, ரேணு என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வசுமனன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசி மகனாகப் பிறந்தார். அவன் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்தான். இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடாரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த கை மண்குடம் ஆகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்தார். சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயைக் கொல்லுமாறு கர்ஜித்தார். மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப பரசுராமர் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்தார். அன்னையின் மீது வீசினார். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பரசுராமர் ‘‘இறந்த என் தாயும், சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்பது அவர்களுக்குத் தெரியக்கூடாது’’ என்று வரம் கேட்டார். ஜமதக்னி முனிவர், சரி அப்படியே ஆகட்டும். அவரவர் சிரசுகளை உடலோடு சேரு, அது ஒட்டிக்கொள்ளும். அவர்கள் தூங்கி எழுவதுபோல் எழுந்து வருவார்கள் என்றார்.

அதன்படி அவரவர் தலையை அவரவர் உடலோடு ஒட்டினான். தாயின் உடலோடு அங்கே ஏற்கனவே மாண்டு போயிருந்த ஒரு பெண்ணின் தலையை எடுத்து ரேணுகா தேவியின் உடலோடு ஒட்டினான். அவர்கள் உயிர்த்தெழுந்தபோது தாயின் சிரசு தனியாக கீழே கிடப்பதையும் வேறு பெண்ணின் சிரசு தாயின் உடலோடு ஒட்டியிருப்பதை உணர்ந்தான். வேறு சிரசு ஒட்டப்பட்டதால் உயிர் வாழ விரும்பாத ரேணுகா தேவி சிலையானாள். அவள் பாதங்களில் அவளுடைய உண்மையான சிரசை வைத்து தாயே என்னை மன்னித்துவிடு அம்மா என்றான் பரசுராமர். தலை மாரி வைத்ததை பொறுத்தருள்வாய் தாயே என்றான். இதுவே தலை மாரிய அம்மா என்பதே மாரியம்மன் என்றானது பின்னாளில். தாய் என்பது தலையா, உடலா என்ற வினாவை தொடுத்த சகோதரர்களிடம் தாய் என்பது  அன்பால் ஆன ஆரண்யம், உணர்வு என்று பதிலளித்தார் பரசுராமர்.பரசுராமர் தன் கோடாரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர்.

-ஆர். அபிநயா

Related Stories: