×

தி.மலைக்கு சென்று கார்த்திகை தீபத்தை நேரில் கண்டால் உண்டாகும் பலன்கள்


1. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து ‘நமசிவாய’ என்ற மந்திரத்தை சொன்னால் அந்த மந்திரத்தை மூன்று கோடி முறை உச்சரித்த புண்ணியத்தை நாம் அடையலாம்.

2. இந்தத் திருநாளில் திருவண்ணாமலையை ஐந்து முறை கிரிவலம் வந்தால், நீங்கள் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்திருந்தாலும் அதில் இருந்து முழுமையாக விமோசனம் கிடைத்து விடும் என்று கூறுகிறது புராணம்.

3. மலையின் மீது தீபம் ஏற்றப்படும் போது

தீப மங்கள ஜோதீ நமோ நம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோ நம-

அருள்தாராய் என்ற பாடலை உச்சரித்தால் நம் வாழ்வில் சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.

4. இந்த திருவண்ணாமலை தீபத்தை காண்பதற்காக சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி அவர்கள் வரும்போது மலையின் உச்சியில் தீபம் ஏற்றும் நெய்யில் சக்திவாய்ந்த மூலிகை தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் அந்த தீபத்தில் இருந்து வெளிவரும் புகை தீய சக்திகளையும், நம் உடம்பில் உள்ள பிணிகளையும் அழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

5 5. இந்த நாளில் மலைமேல் தீபம் காண முடியாதவர்கள், தீபம் ஏற்றப்படும் நேரத்தில் ஈசனை மனதார நினைத்து பூஜை செய்தாலும் அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது நம் முன்னோர்களின் வாக்கு.

Tags : mountain ,Kartik Deepam ,
× RELATED இல்லந் தோறும் தெய்வீகம் கற்பூரத்தின் பயன்கள்