×

இந்த வாரம் என்ன விசேஷம்?

டிசம்பர் 7, சனி - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மஹா ரதோற்சவம். சுவாமிமலை முருகப்பெருமான் யானை வாகனத்தில் திருவீதியுலா.

டிசம்பர் 8, ஞாயிறு - சுக்லபட்ச சர்வ ஏகாதசி. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

டிசம்பர் 9, திங்கள் -  சுக்லபட்ச (சோம) மஹாபிரதோஷம். பரணி தீபம். கார்த்திகை நான்காவது சோமவாரம்.  திருநெல்வேலி நெல்லையப்பர் கொலுதர்பார்க் காட்சி.

டிசம்பர் 10, செவ்வாய் -  திருக்கார்த்திகை. திருமங்கையாழ்வார் (நட்சத்திர) கணம்புல்லர்.  திருவண்ணாமலை அருணாசல நாயகர் ஜோதீஸ்வரூபமாய் மஹா தீப ஜோதி தரிசனம்.

டிசம்பர் 11, புதன் - பௌர்ணமி. சர்வாலய தீபம். வைகானஸ தீபம். தத்தாத்ரேயர் ஜயந்தி. திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு.

டிசம்பர் 12, வியாழன் - பௌர்ணமி. பாஞ்சராத்ர தீபம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

டிசம்பர் 13, வெள்ளி -  மார்கசிர பஹூள பிரதமை. பரசுராமர் ஜெயந்தி. திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்போற்சவம்.

Tags :
× RELATED சிவாலய முருகனின் உலாத் திருமேனிகள்