‘வேலாயுதத்திற்கு மேலாயுதமில்லை’

சம்பா சஷ்டி 2 - 12 - 2019

*சுப்ரமண்ய ப்ரதிஷ்டாவிதி நூலில் முருகனின் மற்றொரு வாகனமான யானை ஐராவத குலத்தில் உதித்தது, வெண்ணிறம், நான்கு தந்தங்கள் கொண்டது, மிகவும் பலமுள்ளது என விவரிக்கப்பட்டுள்ளது.

*கந்தபுராணத்தின் ஒரு பகுதியான சங்கர ஸம்ஹிதை முருகனே ‘பரப்ரம்ஹம்’ என உறுதியாகக் கூறுகிறது.

*முருகனை கிருத்திகை நட்சத்திர தினத்தன்றும், செவ்வாய்க்கிழமைகளிலும் வழிபட்டு தீபம், மணி  சமர்ப்பித்தால் வாக்கு மேன்மை ஏற்படும் என்கிறது சிவபுராணம்.  

*திலக ஸ்வாமி வடிவினனாக முருகனை பூஜிப்பவர்கள் காரியசித்தி பெறுவர் என யாஞ்யவல்க்ய மகரிஷி கூறியருளியுள்ளார்.

*ஆதித்ய ஹ்ருதய மகாமந்திரத்தில் அகத்தியர் ஆதித்யனை ‘ஸ்கந்த’ என்று முருகப் பெருமானோடு ஒப்பிடுகிறார்.

*விராடன் மனைவி ஸ்தேஷ்ணாவின் ஆணைப்படி கீசகனின் வீட்டிற்குச் சென்ற திரௌபதி தன்னை ஆபத்திலிருந்து காக்க ருத்ரன், அக்னி, பகன், விஷ்ணு, சூர்யன், ஸாவித்ரி, பிரம்மா இவர்களோடு ஸ்கந்தனையும் துதித்தாள்.

*பகவத்கீதையில் கிருஷ்ணர் ‘ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த:’ என்று
அருளியுள்ளார்.

*கச்சியப்ப சிவாச்சாரியார், தம் கந்தபுராணத்தின் பல இடங்களில் முருகன் மும்மூர்த்தி வடிவினன் என்று குறிப்பிடுகிறார்.

*தட்சிணாமூர்த்தி வடிவில் தான் சனத்குமாரருக்கு செய்த உபதேசங்களை அவர் முழுமையாகக் கற்றுக் கொண்டதால், ஈசனாக தான் அவரிடமிருந்து உபதேசம் பெற விரும்பினார்.  அவரைத் திருப்திப்படுத்தவே சனத்குமாரர் முருகனாக தோன்றி  உபதேசம் செய்தார் என்பார்கள்.

*முருகப்பெருமானை உபாசிக்கும் அடியார்களுக்கு பயம், அழிவு, சத்ரு, வியாதி, இவை அனைத்துமே அண்டாது.

*விசுவாமித்திரருடன் கானகம் சென்ற ராம - லட்சுமணரை ஈசனின் பின்னால் செல்லும் இரு முருகன்கள் போல் தோன்றினர் என்று தன் ராமாயணத்தில் விவரிக்கிறார் வால்மீகி முனிவர்.

**கம்பன் தன் ராமாயண யுத்த காண்டத்திலே இந்திரஜித்தை முருகனுக்கு
நிகராகவே போற்றிப் புகழ்கிறார்.

*மகாபாரதத்தின் வனபர்வா, சல்யபர்வா, அனுசாசனபர்வா ஆகிய மூன்று பகுதிகளில் ஸ்கந்தனுடைய கதைகள் கூறப்பட்டுள்ளன.

*குமார தந்த்ரத்தில் முருகனுடைய மயிலுக்கும் காயத்ரி மந்திரம் அருளப்பட்டுள்ளது: ‘சுக்லாபாங்காய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி தந்நோ: மயூர ப்ரசோதயாத்’என்பதே அந்த மந்திரம்.

ந.பரணிகுமார்

Tags : war ,
× RELATED தீவிரவாதத்தின் மூலம் நடத்தும் மறைமுக...