இந்த வாரம் என்ன விசேஷம்?

நவம்பர் 23, சனி : தேய்பிறை வைஷ்ணவ ஏகாதசி. திருச்சானூர், பைராகிமடம் தாயார் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஏழுமலையப்பன்  கத்தவால் சமஸ்தானம் மண்டபம் எழுந்தருளல்.

நவம்பர் 24, ஞாயிறு : தேய்பிறை மஹாபிரதோஷம். மாத சிவராத்திரி. வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல். ஸ்ரீவாஞ்சியம் பானுவார தீர்த்தம். மதுரை  இன்மையில் நன்மை தருவார் திருக்கோயில், சிதம்பரம் சிவபெருமான் சந்நதியில் நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்புபூஜை.

நவம்பர் 25, திங்கள் : கார்த்திகை இரண்டாவது சோமவாரம். கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.

நவம்பர் 26, செவ்வாய் : அமாவாசை. ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா. கோடிகன்யா தானம் தாதாச்சாரியார் திருநட்சத்திரம்.

நவம்பர் 27, புதன்: சாந்த்ரமான மார்கசிர மாச ஆரம்பம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில்  நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

நவம்பர் 28, வியாழன் : சென்னை பைராகிமடம் தாயார் கருடசேவை, திருச்சானூர் பத்மாவதி தாயார் கருடசேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

நவம்பர் 29, வெள்ளி : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு. சங்கரன் கோவில்  கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

Related Stories:

>