பலன் தரும் ஸ்லோகம்

(வீட்டில் சுபசகுனங்கள் தோன்ற)

ஸுரார்ச்சிதபதாப்ஜம் தம் ஸமஸ்த புவனேச்வரம்

ஸ்வபந்தம் ஸர்வதா பூமெள மஹாபூதம் நமாம்யஹம்

ஸுனிக்ஷிப்த மதோவக்த்ரம் தேவைர்பூமா வஜாஜ்ஞயா

ஸர்வமங் கல தாதாரம் வாஸ்துதேவம் நமாம்யஹம்

- வாஸ்து புருஷ ஸ்தோத்திரம்

பொதுப்பொருள்: இந்த உலகம் அனைத்திற்கும் கடவுளானவனும், விரிந்து பரந்த உருவத்தைக் கொண்டவனும், எப்பொழுதும் பூமியில் தூங்கிறவனுமான வாஸ்து புருஷனை வணங்குகிறேன். பூமியில் நன்றாக அமைந்தவரும், நான்முகனின் ஆணைக்கிணங்க மேல் நோக்கிய முகத்துடன் தூங்குபவனும், அனைத்து மங்களங்களை அளிப்பவனுமான வாஸ்து தேவனை தலை வணங்குகிறேன். இத்துதியை வாஸ்து தேவன்  கண் விழிக்கும் 24.11.2019 அன்று பாராயணம் செய்தால் வீட்டில் சுபசகுனங்கள் தோன்றும்.

Related Stories:

>