சக்தி வாய்ந்த கண்களை கொண்ட வடசென்னை சீரடி சாய்பாபா

தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்கான சீரடி சாய்பாபா ஆலயங்கள் உள்ளன. பெரும்பாலான ஆலயங்களில் சுமார் 4 முதல் 5 அடி உயரத்துக்கு சீரடி சாய்பாபா சிலையை வைத்து வழிபடுகிறார்கள். அந்த கம்பீர சிலைகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு அற்புதத்தைக் கொண்டிரு க்கும். சில ஆலயங்களில் சீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டைக்கு வந்த விதம், பிரதிஷ்டை செய்யப்பட்ட விதம் என பல்வேறு அதிசயங்களைக் கொண்டிருக்கும். சில சமயம் சிலை விஷயத்தில் சீரடி சாய்பாபா நடத்தும் திருவிளையாடல்கள் ஆச்சரியத்தின் உச்சமாக இருக்கும்.

அத்தகைய ஒரு ஆச்சரியமான அம்சத்துடன் வடசென்னை சீரடி சாய்பாபா ஆலயத்தில் உள்ள மூலவர் பாபா சிலை திகழ்கிறது. இந்த சிலையின் கண்கள் மிக, மிக, சக்தி வாய்ந்தவை. பாபாவின் அந்த கண்களை நாம் உன்னிப்பாக பார்க்கும் போது, அவர் நமக்கு விழிகளை உருட்டி காட்டுவது போல இருக்கிறது. அதிலும் சாய்பாபா சிலையின் இடது புறம் (நமக்கு வலதுபுறம்) அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பி அருகில் நின்று பாபாவை பக்கவாட்டில் பார்க்கும்போது, பாபாவின் இரு விழிகளும் கூர்மையான ஒளியுடன் இருப்பதை உணர முடியும். சில சமயம் பாபாவின் பார்வை பக்தர்கள் திசை நோக்கி கூட சற்று திரும்பி பார்ப்பது உண்டாம். இது சாய்பாபா தினம், தினம் தன் பக்தர்களிடம் நடத்தும் திருவிளையாடல் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

Related Stories: