கவித்திறன் அருளும் கலைமகள்

சரஜ் ஜ்யோத்ஸ்னா சுத்தம் சசியுத ஜடாஜூட மகுடாம்

வர த்ராஸ த்ராண ஸ்படிக குடிகா புஸ்தக ராரம்

ஸக்ருந்ந த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே

மது க்ஷீரத்ராக்ஷா மதுரிம துரீணா: பணிதய:

பொருள்: சரத்கால சந்திரனைப்போல் பிரகாசிக்கும் உன் திருமேனி, உனது சடை முடியில் பிறை மதியும், மணி முடியும் சூடியுள்ளாய்! திருக்கரங்களில் மணிமாலை புத்தகங்கள் ஏந்தியுள்ள நீ, பக்தர் வேண்டும் வரங்களை அருளிக்கொண்டு அபயப் பிரதானத்தை அருள்கிறாய். உனது சேவடியை எவன் ஒருவன் ஒருமுறை வணங்குகின்றானோ அவனை, தேன், பால், திராட்சை இவற்றின் இன்சுவை சாற்றினையே துச்சமாக நினைக்கும்படியான வாக்கு சாதுர்யம் உள்ளவனாகச் செய்து கவி சிரேஷ்டர்களான மகா வித்வான்களின் சாந்நித்யத்தில் அமர வைக்கிறாய். மேலேயுள்ள சௌந்தர்ய லஹரி ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டே வாருங்கள். சரஸ்வதிக்கு  தேன், பழம், சர்க்கரை பிரியத்தோடு நிவேதனம் செய்யுங்கள். கவி ஊற்றாக பொங்கும்.

Related Stories: