×

சங்கடம் போக்கும் மொரட்டாண்டி சனீஸ்வரன்

மொரட்டாண்டி, விழுப்புரம்

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டியில் 27 அடி உயரம் கொண்ட விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் நவக்கிரக பரிகார ஷேத்திரம் அமைந்துள்ளது. அகத்திய மகிரிஷியின் சிஷ்யரும், காஸ்யப முனிவரின் சிஷ்ய பரம்பரையில் வந்தவருமான சிவ சிதம்பர கீதாராம் குருக்களின் மகன் சிவஸ்ரீ சிதம்பர கீதாராம் குருக்கள் கழுவெளி சித்தர் எனும் முரட்டாண்டி சித்தர். சித்தர் தவம் செய்த மொரட்டாண்டி கிராமத்தில் உலக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய சித்தரின் கனவில் வந்து கூறியவாறு 54 அடி உயர கிரக சாந்தி கணபதிக்கு எதிரில் உலகிலேயே மிக உயரமான 27 அடி உயர விஸ்வரூப பஞ்சலோக மகா சனீஸ்வர பகவான் மற்றும் 108 திவ்ய விருட்சங்களுக்கு (மரங்கள்) நடுவில் 12 அடி உயர நவக்கிரகங்கள் மற்றும் 9 அடி உயர சொர்ண சிதம்பர மகா கணபதி, 9 அடி உயர ஜெயமங்கள சர்வ ரோக ருண விமோசன சத்ரு சம்கார சண்முக சுப்ரமணிய சுவாமி, 80 அடி உயர மகர கும்ப கோபுரம், துர்கா கணபதி ஷேத்ரபாலகர், அபயங்கரர், வாஸ்து புருஷன் முதலிய தேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்த தலத்திற்கு வந்து பரிகாரம் செய்து வணங்கினால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், வியாபாரத்தடை அகலும், குடும்ப பிரச்னை, தார தோஷம் உள்ளிட்டவை தீரும் என நம்பப்படுகிறது. மேலும் பல நன்மைகள் கிட்டும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஷேத்திர நிர்வாகிகள் கூறுகையில், பக்தர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் 90 நாட்களில் விமோசனம் கிடைக்க பரிகாரம் செய்து தரப்படும். கடவுள் மேல் சந்தேகம் இல்லாமல் நம்பிக்கை வையுங்கள். கடவுள் நினைத்தால் எப்படிப்பட்ட சூழலையும் மாற்ற முடியும். உங்கள் சங்கடங்களை நீக்கி, சந்தோஷத்தை நிலைக்க வைக்க கடவுளால் மட்டுமே முடியும் என்பதை உணருங்கள். ஜாதகம், நாள், மனையடி சாஸ்திரம், திருமண பொருத்தம், கும்பாபிஷேகம், ஹோமங்கள், சாந்திகள் சிறந்த முறையில் செய்யப்படும். தன வியாபாரம், பூமி தொழில் திருஷ்டி முதலிய எந்திரங்கள் செய்து பூஜையில் வைத்து தரப்படும். இங்குள்ள கோசாலையில் கோதானம், கோபூஜை செய்து பக்தர்கள் கோமாதா அருள்பெறலாம்.

- உ.வீரமணி, படம்: ஆர். முபாரக்

Tags : Morattandi Saneeswaran ,
× RELATED வாசகர்களின் ஆன்மிக அனுபவம்