×

மகாலட்சுமியின் வாகனமாக ஏன் ஆந்தையை வைத்திருக்கிறார்கள்?

மகாலட்சுமியின் படத்தை உற்றுப் பாருங்கள். அருகே ஆந்தை இருப்பது தெரியும். மகாலட்சுமியின் வாகனமே ஆந்தை தான். ஆந்தை இரவில் உலவி பகலில்  உறங்கி வாழும். அகன்ற சதுரமான முகத்தில் பெரிய வட்டமான கண்களைக் கொண்டது, புள்ளிகளை உடலில் கொண்ட சிறுபறவையான இது பொந்தில் வாழ்வது.  பொந்தில் பாடியவாறு ஆந்தைகள் மகிழ்வுடன் இருப்பதைத் தேவாரத்தில் பல இடங்களில் காண்கிறோம்.

வடநாட்டில் மகாலட்சுமியின் செல்லப் பறவையாகவும், வாகனமாகவும் ஆந்தைகளைக் கூறுகின்றனர். வட நாட்டுக் கலைஞர்கள் தீட்டும் லட்சுமி ஓவியங்களில்  ஆந்தை வாகனமாகவும், துணையிருப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது. ஆந்தைகள் முகத்தை முதுகுப் பக்கத்தையும் திரும்பிப் பார்க்கும் அமைப்பைக் கொண்டவை.  அதனால் எப்போதும் தமது பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாலா திசைகளிலும் கவனத்தை வைத்திருப்பவர்களாக இருக்கும் செல்வம் மிகுந்தவர்கள் காவல் தெய்வமாக ஆந்தைகளை வழிபடுகின்றனர். அது தவிர இரவில் தூங்காது விழித்திருந்து செல்வத்தை பாதுகாக்கின்றன என்கிற ஐதீகமும் இதில் உள்ளது.

Tags : Mahalakshmi ,
× RELATED கோயில் நுழைவாயிலில் உள்ள படியினை...