×

திருமண தடை நீக்கும் சோழராஜா கோயில்

குமரியில் அருள் பாலிக்கிறார்

குமரியில் சேர, சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்ததற்கு ஆதாரமாக பழமையும், பெருமையும், அழகும் வாய்ந்த கோயில்கள் சாட்சியாக விளங்குகின்றன. கோட்டாறு என்ற பெயரில், வடசேரி, கிருஷ்ணன்ேகாயில், நாகர்கோவில் முன்பு திகழ்ந்தது. தற்போது நகரமயமாதல் காரணமாக நாகர்கோவில் என்ற பெயரில் நகரப்பகுதிகள் மாறிவிட்டன. ஆகவே நாகர்கோவிலின் நுழைவுவாயிலாக ஒழுகினசேரி திகழ்கிறது. உலக முழுதுடையான்சேரி என்ற பெயரே காலப்போக்கில் மருவி ஒழுகினசேரியாக மாறியதாக கருதப்படுகிறது. இந்த பெயர் காரணமாக இங்கு சோழ மன்னர் அமைத்த சிவன் கோயில் திகழ்கிறது. நாகர்கோவிலில் ஓடும் குமரியின் பெருமை வாய்ந்த பழையாற்றங்கரையில் அரவநீள்சடையான் என்ற பெயரில் சிவபெருமான் இங்கு கோயில் கொண்டுள்ளார்.

கி.பி10ம் நூற்றாண்டில் குமரி மாவட்ட பகுதிகள் சேர மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்த போது, சோழமன்னர் ராஜேந்திர சோழனின் மகன் ராஜேந்திர சோழீஸ்வரனால் கட்டப்பட்டது. இங்கு மூலவர் ராஜேந்திர சோழீஸ்வரர், தாயார் கோலவார் குழலேஸ்வரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். ராஜேந்திர சோழீஸ்வரன் சேர நாட்டை கைப்பற்றும் நோக்கத்துடன் தஞ்சையில் இருந்து பெரும் படைகளுடன் சென்று நாகர்கோவில் வந்து தங்கி உள்ளார். அப்போது அவரது கனவில் சிவபெருமான் தோன்றி அங்கு கோயில் எழுப்பும்படி கூறி மறைந்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து இங்கு ராஜேந்திர சோழீஸ்வரனால் கோயில் எழுப்பப்பட்டு உள்ளது.

தஞ்சை பெரிய ேகாயிலின் சாயலில் சிறிய அளவில் இந்த கோயில் கட்டப்பட்டு உள்ளது. இங்கு சிவபெருமான் அரவ நீள்சடையான் என்ற பெயரில், சற்று உயரமாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த கோயிலில் பக்தர்களுக்கு சிவன் அருள் பாலித்து வந்தாலும் சோழ மன்னர் உருவாக்கம் செய்ததால் சோழ ராஜா கோயில் என்ற பெயரில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. திருமணம் ஆகாத பெண்கள் சோழ ராஜா கோயிலுக்கு வந்து வழிபட்டால் தடைகள் நீங்கி, உரிய காலத்தில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து சிவனை வழிபட்டு செல்கின்றனர்.

Tags : Cholaraja Temple ,
× RELATED திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்