×

அருள்பாலிக்கும் அம்மன்!

பராசக்தி, யாதுமானவள், சக்தி, காளி, அம்மன் என்று பல பெயரால் போற்றப்படுபவள் தான் ஆதிசக்தி. பரம் பொருளான இவள் ஒவ்வொரு இடங்களிலும் பல்வேறு விதமாக அருள்பாலித்து வருகிறாள்.

*  10 தலைகள், 54 கரங்களுடன் காளி சிலை ஆஜ்மீர் அருங்காட்சியகத்தில் உள்ளது.
*  காசியில் 9 தேவி ஆலய தரிசனத்தை ‘நவகெளரி யாத்திரை’ என்பர்.
*  கௌஹத்தி காமாக்யா திரிபுர பைரவிக்கு விக்கிரகம் இல்லை. பாறைக்கே பூஜை செய்யப்படுகிறது.
*  ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி பாதத்தில் ஸ்ரீசக்ரயந்திரம் உள்ளது.
*  சோமநாத்தில் அம்பிகை சந்திரபாகா என்ற நதி ரூபமாக இருக்கிறாள்.
*  அஸ்ஸாம் காமகிரிபீடம், சத்யபாமா நரகாசுரனை வதைத்த தலம்.
*  குஜராத்தில் அம்பிகை சந்திர வடிவில் அருள்பாலிக்கிறாள்.
*  திருக்குற்றாலத்தில் வீற்றிருக்கும் பராசக்தி, மும்மூர்த்திகளை ஈன்றவள் என்று போற்றப்படுகிறாள்.
*  கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் விஷ்ணுவைப் போலவே, தொடையில் ஒரு கையை வைத்தபடி காட்சியளிக்கிறாள் மங்களாம்பிகை.
*  ஸ்ரீநகர் சம்புநாகேஸ்வரி தீப ரூபமாக வழிபடப்படுகிறாள்.
*  இமயமலை கேதாரத்திலுள்ள மார்க்கத்தாயினி ஆலயம் 6 மாதங்கள் பனியால் மூடப்பட்டிருக்கும்.
*  காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயிலைத் தவிர வேறெந்தக் கோயிலிலும் அம்பாளுக்கென்று தனியாக சந்நதியில்லை.
*  ஆற்காடு அருகேயுள்ள வளைத்தூரில் பெரிய நாயகி அம்பாள் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கின்றாள். இவளது 4 கைகளிலுள்ள சுண்டுவிரல்கள் நான்கிலும் மோதிரம் அணிந்துள்ளது சிறப்பாகும்.
*  கன்னியாகுமரி பகவதி விக்கிரகத்தின் மேல்பகுதி சொரசொரப்பாகக் காணப்படுகிறது. இதை ருத்ராட்ச விக்கிரகம் என்பர்.
*  திருப்புடை மருதூரில் அருள்பாலிக்கும் கோமதி அம்பாளின் திருமேனி கல்லால் செதுக்கப்படாமல், ருத்திராட்சத்தால் செதுக்கப்பட்டுள்ளது.
*  சமயபுரத்துக்கு அருகிலுள்ள உஜ்ஜயினி காளி அம்மன் ஆலயத்தில், ஒரு மார்பு இல்லாமல், 3 கைகளுடன் அர்த்தநாரீஸ்வரியாக ஆனந்த சவுபாக்கிய சுந்தரியாக அம்பாள் காட்சி தருகிறாள்.

Tags : Arulpalikam Amman ,
× RELATED சாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..?