சமண தீபாவளி

சமண சமயத்தினர் தீபாவளியைத் தனிச் சிறப்புடன் கொண்டாடுகின்றனர். அச்சமயத்தின் புராணங்களின் படி ஒவ்வொரு காலத்திலும் உயர்ந்த ஞானத்தைப் பரப்ப  முதன்மை பெற்ற குருமார்கள் தீர்த்தங்கரர்கள்  எனும் பெயர்களில் இருபத்து நால்வர் தோன்றுகின்றனர்.

Advertising
Advertising

அப்படி வந்தவர்களுள் இக்காலத்தில் இறுதியாக வந்தவர் பகவான் வர்த்தமான மகாவீரர். அவர் வீடுபேறு பெற்ற நாள் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியாகும்.  அந்நாளில்  அவரை நினைந்து வரிசையாகத் தீபங்களை ஏற்றினர். இதுவே சமண சமயத் தினரின் தலைசிறந்த விழாவாகும். இந்த நாளில் ஜைன ஆலயங்களில்  சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கோயில்களிலும் வீடுகளிலும் விளக்குகளை ஏற்றிவைத்துத் தீபாலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.

Related Stories: