×

பலன் தரும் ஸ்லோகம்

(எந்த ஆபத்தும் வராமல் தடுக்கும் சனிபகவான் துதி)

நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:
        
பொதுப் பொருள் : மிகவும் சாந்தமானவரும், வரத்தை அளிப்பவருமான சனி பகவானை மேற்கண்ட துதியால் தியானம் செய்தால் ஆயுள் விருத்தி, விவசாயத்தில் மேன்மை, கால்நடை விருத்தி, இரும்புத் தொழில்கள், செங்கல் சூளையினால் லாபம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மனநிம்மதி, வேலைக்காரர்களால் நன்மைகள் உண்டாகும். எலும்பு, பற்கள், கணையம் சம்பந்தமான நோய்கள், சளி, வாத நோய்கள் வராமல் தடுக்கும். சட்ட பூர்வமான தண்டனை, சிறைவாசம், விபத்துக்கள், மனோதைரியம் இழந்து தடுமாறுதல், சித்தப்பிரமை, மேகநீர் உபத்திரவம் ஆகியவை ஏற்படாமல் இருக்க தடுக்கும். மங்ககளங்கள் பெருகும்.

Tags : Slocum ,
× RELATED பலன் தரும் ஸ்லோகம் (உயர் பதவி கிடைக்க...)