×

இந்த வாரம் என்ன விசேஷம்?

அக்டோபர் 12, சனி - சதுர்த்தசி. திருக்கடையூர் ஸ்ரீகாலசம்ஹாரமூர்த்தி அபிஷேகம். நடராஜர் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை கல்யாண வேங்கடேசப் பெருமாள் துளசி பிருந்தாவனம். ஊஞ்சல் உற்சவசேவை.

அக்டோபர் 13, ஞாயிறு - பௌர்ணமி. திருவாரூர்  தேவேந்திர பூஜை, திருவையாறு முதலிய தலங்களில் நிறைபணிவிழா. சந்தான கோபால விரதம். கோமதி பூஜை. மதுரை ஸ்ரீகூடலழகர் பாற்குடக் காட்சி.

அக்டோபர் 14, திங்கள் - பிரதோஷம். அப்பய்யதீட்சிதர் ஜெயந்தி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு கண்டருளல். தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு.

அக்டோபர் 15, செவ்வாய் - துவிதியை. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.

அக்டோபர் 16, புதன் - திருதியை. ஸ்ரீரங்கம் ஊடலோற்சவம் ஆரம்பம். கிருத்திகை. கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.

அக்டோபர் 17, வியாழன் - திருதியை. வேளூர் கிருத்திகை. தென்காசி ஸ்ரீ உலகம்மை திருவீதியுலா, திருத்தணி, சுவாமிமலை இத்தலங்களில் முருகப்பெருமான் புறப்பாடு.

அக்டோபர் 18, வெள்ளி - பஞ்சமி. திருச்செந்தூர் ஸ்ரீசண்முகர் அன்னாபிஷேகம். துலாகாவேரி ஸ்நானம் ஆரம்பம்.

Tags :
× RELATED குலம் தழைக்க அருள்வார் குருநரசிம்மர்