சப்த கண்ணிகளை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள்

சப்த கண்ணிகளை நாம் வழிபட்டால் நம் வாழ்விற்கு தேவையான அனைத்து நலன்களையும் நாம் பெற்றிடலாம். தூய்மையான மனதுடன் இந்த சப்த மாதர்களை வணங்கினால் நம்மை காத்தருள்வார். சப்த கண்ணிகளின் சிறப்புகள் பற்றியும், அவர்களுடைய மகிமைகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம். சிவனின் அம்சமான வீரபத்திரரை துணையோடு அருள் புரியத் தொடங்கினார்கள். சப்த கன்னிகளை மக்களை காக்க சிவபெருமானால் அருளப்பட்டது.ஒரு வீட்டின் திசைகளை கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை, ஈசான்ய மூலை என்று கூறுவார்கள். அது வடகிழக்கு மூலை இறைவனுக்குரிய ஈசானிய மூலையாகும். தென்மேற்கு மூளையானது கண்ணியத்திற்குரிய கண்ணிமுளை ஆகும். . இந்த சப்த கண்ணிகள் சிவாலயங்களில் நாம் பார்க்கமுடியும். ஆலயங்களில் மட்டுமல்லாமல் ஏரிக்கரையோரம் குளக்கரை ஆற்றங்கரைகளில் எல்லைகள் எங்கும் இந்த சிலைகளை வழிபடும் வழிபாட்டு முறை இன்றும் இருக்கின்றது. அதாவது, பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித் தன்மை வாய்ந்த ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் உண்டாக வேண்டும். என்று பிரம்மனிடம் இந்த சிக்கலான வரத்தை சண்டன் முண்டன் என இரண்டு அரக்கர்கள் பெற்றுக்கொண்டனர்.

அசுரர்களின் கொடுமையை பார்த்து தாங்க முடியாமல் பராசக்தியானவள், அசுரக் கூட்டத்தை அழிக்க தன்னிடமிருந்து ஏழு கண்ணிகள் பராசக்தியானவள் உருவாக்கினாள். சிவன் விஷ்ணு பிரம்மா முருகன் வராகமூர்த்தி எமன் என ஒவ்வொருவரின் அம்சமாக உருவாக்கிய 7 கன்னியர்கள் அசுரர்களை அளிக்கின்றனர். இந்த சப்த கண்ணிகள் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.சப்த கன்னிகளை நாம் வழிபடும் போது நோய்நொடி இல்லாத சிறந்த ஆரோக்கியமான வாழ்வை பெறலாம். பழமையான சிவாலயங்களில் கர்ப்பகிரகத்தை ஒட்டி முதல் பிரகாரத்தின் உள்ள தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு முன்பாக சப்த கன்னியர்களை நாம் காணமுடியும். பிராமி இவர் நான்முகனான பிரம்மன் அம்சமாக தோன்றியவர். அரசுப் பணிகளுக்காக முயற்சி செய்பவர்கள் தினமும் காயத்திரி மந்திரத்தை கூறி வருவதன் மூலம் கண்டிப்பாக அவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.

காயத்திரி மந்திரத்தை படிக்கும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மகேஸ்வரி மகேசனின் சக்தி உடையவர், இவரை வழிபடுவதனால் கோபங்கள் நீங்கி அமைதியான வாழ்வு கிடைக்கும். வராகி சிவன், சக்தி, ஹரி என மூன்று அம்சங்களை பெற்றவர். பன்றியினவராகியை குறிப்பிடும் போது வாழ்வில் சிக்கல்கள் தடைகள் தீராத பகைகள் விலகிவிடும். விஷ்ணுவின் அம்சமாகும் வளமான வாழ்க்கை சகல பாக்கியங்கள் செல்வ என அனைத்தையும் வைஷ்ணவி தேவியை வணங்குவதால் கிடைக்கும். திருமணம் ஆகாத ஆண்கள் வழிபட்டால் நல்ல வாழ்க்கை துணைவி சிறந்த மனைவியாக கிடைப்பாள். கல்யாணம் ஆகாத பெண்கள் இந்திராணியை மூலம் மிகச் சிறந்த கணவனைப் பெறமுடியும். முருகனின் அம்சமே கவுமாரி எனப்படுகின்றது இவரை வழிபடுவதன் மூலம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் அதே போல் முருகனின் அழகோடு இவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும் ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளி தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக காட்சி தருகிறார் இந்த சாமுண்டி தேவியானவள் சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் சாமுண்டி தேவியை வழிபடுவது மூலம் எதிரிகளின் தொல்லை நீங்கி நமக்கு தேவையான செல்வம் சுகங்கள் நமக்கு கிடைக்கும். இவர்களே சப்த கன்னிகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

Related Stories: