×

அஷ்ட யோகம் ஏற்பட சிவனுக்கு ரிஷப விரதம் இருங்கள் !!

நமது உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் இறைநிலைக்கு உயர்த்துவதே ஆன்மிகம் ஆகும். ஒரு மனிதனின் உலகியல் வாழ்வின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி, அனைத்து இன்பங்களையும் அனுபவித்து முடித்தவர்களால் மட்டுமே முடியும் ஆன்மீகத்தில் சிறக்க முடியும். நமக்கு அனைத்தையும் வழங்கும் இறைவனை வணங்கி, நாம் விரும்பியதை பெறுவதற்கு விரத வழிபாடு உதவுகிறது. இதில் சிவபெருமானை வணங்கும் “ரிஷப விரதம்” குறித்தும், அவ்விரதத்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.ரிஷப விரதம் என்பது சிவபெருமானின் வாகனமாக இருப்பவரும், அவரின் அணுக்க தொண்டராக இருக்கும் ரிஷபமாகிய நந்திதேவர் மற்றும் சிவபெருமான் ரிஷபாரூடர் என்கிற பெயரில் அழைக்கப்படும் சிவனுக்கு இருக்கும் விரதம் தான் ரிஷப விரதம் எனப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கு சரியான காலகட்டம் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் வைகாசி மாதமாகும்.

வைகாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய தினங்களில் இந்த ரிஷப விரதத்தை மேற்கொள்வது சிறந்தது. ரிஷப விரதம் மேற்கொள்ளும் தினத்தன்று அதிகாலையில் எழுந்ததும் மனதிற்குள் நந்தி மீது ரிஷபாரூடராக வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்க வேண்டும். பின்பு குளித்து முடித்ததும், உணவு ஏதும் உண்ணாமல் உங்களிடம் வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய அளவு ரிஷபாரூடர் விக்ரகம் இருந்தால், உங்கள் பூஜையறையில் வைத்து, மலர்களை சமர்ப்பித்து, சிவனுக்கு பிடித்த அரிசி கொண்டு செய்யபட்ட அன்னங்கள் மற்றும் பாயசத்தை நைவேத்தியமாக வைத்து சிவமந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் சாப்பிடலாம்.இத்தினத்தில் காலை அல்லது மாலை வேளைகளில் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்களுக்கு சிறந்த நன்மைகள் உண்டாகும்.

பின்பு உங்களால் முடிந்த அளவிற்கு அக்கோயில்களில் சிவனடியார்களுக்கும், இன்ன பிற பக்தர்களுக்கும் அன்னதானம் செய்து அந்த பக்தர்களுடன் சேர்ந்து நீங்களும் பிரசாதங்களை சாப்பிட வேண்டும். பிறகு சிவ சிந்தனையுடன் வீட்டிற்கு திரும்பி, சிவனை வழிபட்டு இரவு உணவாக பால் மற்றும் பழங்களை சாப்பிட்டு ரிஷப விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.ரிஷப விரதம் பற்றி ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளன. ரிஷப விரதத்தை முறையாக அனுஷ்டிப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும், நோய்கள் அண்டாத வாழ்வு உண்டாகும், செல்வ நிலை உயரும், அனைத்து நியாயமான ஆசைகளும் பூர்த்தியாகும், அஷ்ட யோகம் ஏற்படும், சிவயோகி ஆகவும் கூடும். அஷ்டதிக் பாலகர்கள், கருட பகவான் போன்றோர்கள் இந்த ரிஷப விரதத்தை அனுஷ்டித்து சிவனிடம் பல வரங்களை பெற்றனர்.

Tags : Shiva ,Rishabha ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு