மேஷ ராசி பணியாள்

என்னோட ராசி நல்ல ராசி!! 6

முனைவர் செ. ராஜேஸ்வரி

ownership, dedication, commitment போன்ற ஆங்கிலச் சொற்களுக்கு அடையாளமாக இருப்பவர்கள் மேஷ ராசியில் பிறந்த பணியாட்கள் . இவர்களை நம்பி ஒரு நிறுவனத்தை இவர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியூர், வெளிநாடு  செல்லலாம். கள்ளக் கணக்கு எழுதாமல் விசுவாசமாகத்  தானும் உழைத்து மற்றவர்களிடமும் வேலை வாங்கி தனது  நிறுவனத்துக்கு ஒரு assetஆக லாபமாக இருப்பது உறுதி .

யாருக்கு இத்தகைய குணாதிசயம் அமையும்?

மார்ச் 21 முதல் ஏப்ரல் 22 வரை பிறந்தவர்கள்.சூரியன் மேஷ ராசியில் இருக்கும் சித்திரை மாதத்தில் [ஏறத்தாழ ஏப்ரல் 14 முதல் மே 15 வரை] பிறந்தவர்கள்ஜாதகத்தில் மேஷ ராசிக்காரர்கள் [ராசியாதிபதி வலுவாக இருந்தால்]மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள் [லக்கினாதிபதி வலுவாக இருந்தால்]சூரிய ராசிகளின் படி மாதக் கடைசியில் அடுத்த ராசியின் பண்புகள் கொஞ்சம் வரத் தொடங்கிவிடும். ஏப்ரல் 20க்கு மேல் ரிஷப ராசியின் பண்புகள் தெரியத் தொடங்கும். மார்ச் 10 நாள் வரை மீன ராசியின் பண்புகளும் காணப்படும். எனவே முன் பின் ராசிகளின் பண்புகள் மற்றும் ஜாதகத்தில் ராசியாதிபதி,  லக்னாதிபதியின் வலு ஆகியவற்றையும்  குணாதிசய ஆராய்ச்சியில் சேர்த்து கொள்ள வேண்டும்.  பொதுவில் இந்த கால எல்லைக்குள் பிறந்தவர்களுக்கு இங்கு விளக்கப்படும் குணாதிசயம் அமையும்.

மேஷ ராசிப் பணியாள்

மேஷ ராசிக்காரரை வேலை வாங்கவேண்டும் என்றால் அவருக்கு சாதாரணமான அல்லது அவர் படிப்புக்கு ஏற்ற வேலை வயதுக்கு ஏற்ற வேலை என்று எதையும் கொடுக்கக் கூடாது. அவருக்கு சவாலாக இருக்கும் வேலையை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அதை சாதித்துக் காட்டுவார். இது முடியாது என்று மற்றவர் சொல்வதை அவரிடம் ஒப்படைத்தால் அதை அவர் முடித்துக் காட்டுவார். அந்த வேலை அவருக்கு புதுமையாகவும் சவாலாகவும் இருக்க வேண்டும். எல்லோரும் செய்யும் வேலையை அல்லது சுளுவாக முடிக்கும் விலையை இவரிடம் கொடுத்தால் இவர் அதை ரசித்து செய்யமாட்டார்.

மற்றவர்கள் வேலையை அலுப்பில்லாமல் அலட்டிக் கொள்ளாமல் செய்து முடிக்க ஆசைப்படுவர். ஆனால் மேஷ ராசிக்காரர் வித்தியாசமான சவாலான [adventure] வேலைகளைச் செய்வதையே விருப்பமாகக் கொள்வர். குமாஸ்தா வேலை இவர்களுக்குப் பிடிக்காது. காவல் துறை, புலனாய்வு, ராணுவம், போன்ற துறைகளில் சுறுசுறுப்பாக செய்யும் வேலைகளை விரும்பி செய்வர்.

நானே ராஜா நானே மந்திரி

மேஷ ராப் பணியாள் தன்னை நல்ல வேலைக்காரன் என்று காட்டிக்கொள்வதில் முனைப்புடன் ஆர்வத்துடன் இருப்பார். இந்த நிறுவனமே தன் ஒருவனால் தான் இயங்குகிறது. நான் இந்த நிறுவனத்தின் பெருமையை உயரத்திற்குக் கொண்டுபோவேன். இது என் நிறுவனம் என்று மனதில் உறுதி பூண்டு உழைப்பார். இரவு பகல் பாராமல் உழைப்பார். அவர் வேலையில் யாரும் குற்றம் சொல்லக் கூடாது; அது அவருக்கு பிடிக்காது. ஏதேனும் தவறு தென்பட்டால் அவர் மதிக்கின்ற ஒருவர் அதை மென்மையாக எடுத்துச்சொன்னால் கேட்டுக்கொள்வார். மனமுருகி மன்னிப்புக் கேட்பார். வேறு யாராவது போகிற போக்கில் அவர் வேலையை விமர்சித்தால் ஒன்று அவரைக் கடுமையாகக் கோபிப்பார் அல்லது இவர் வேலையை விட்டுப் போய்விடுவார். மரியாதை இல்லாத நிறுவனத்தில் லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இவர் இருக்க மாட்டார். அவர் சம்பளத்துக்கு வேலை செய்பவர் கிடையாது. அவருக்கு அங்கீகாரம் மற்றும் பாராட்டு தான் உண்மையான சம்பளம். பணம் ரூபாய் என்பது அடுத்தது தான்

சம்பளத்துக்கு மேல் வேலை செய்தல்

மேஷ ராசிப் பணியாள் தன் தகுதிக்கேற்ற சம்பளத்தை அவரே நிர்ணயிப்பார். அதைக் கேட்கவும் செய்வார். ஆனால்  சம்பளத்துக்குக் கூடுதலாக இரண்டு மடங்கு வேலை செய்ய காத்திருப்பார். ஆனால் அவரிடம் வேலை வாங்க முதலாளிக்குத் தெரிந்திருக்க வேண்டும். மேஷ ராசிப் பணியாள் அமைவது ஒரு நிறுவனத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம். அவரால் நிறைய வருமானம் பெருகலாம். அவர் மாதிரி நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்க்கும் ஆட்கள் கிடைப்பது அரிது. ஆனால் அவரைப் பாராட்ட வேண்டுமே தவிர, நோகடிக்க கூடாது. ஒரு சொல் ஒரு முகச்சுளிப்பு கூட அவரது மனதை நோகடித்துவிடும். அவர் மனம் அனிச்சம் மலரை விட மென்மையானது.

அவரே வேலையை விட்டு நின்றுவிடுவார்.வேலையை தூக்கி எறிவதில் மேஷ ராசிக்காரருக்கு நிகர் மேஷ ராசிக்காரர்தான். மாதம் ஒரு நிறுவனத்துக்கு வேலைக்குப் போனாலும் அந்த நிறுவனத்தில் கௌரவமாக இருப்பார். இவர் அந்த நிறுவனத்தை விட்டு விலகிய பின்பு அங்கு இருப்பவர்கள் இவரைப் பற்றி புகழ்ந்து பேசுவதுண்டு. ‘அவர் மாதிரி வருமா? அவர் நல்ல வேலைக்காரர். ‘சின்சியர் சிகாமணி’ அப்படி ஆள் இனி கிடைக்காது’ என்று நினைத்து கொள்வார்கள்.

அந்தச் சிறப்பு இவருக்கு எப்போதும் கிடைக்கும். பத்து இடத்தில் இவர் வேளை பார்த்துவிட்டு வெளியேறி இருந்தாலும் பத்து இடத்திலும் இவருடைய இல்லாமை [absence] உணரப்படும். மேஷ ராசிப் பணியாளிடம் நீங்கள் இருந்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி ஒரு வேலையை ஒப்படைத்துவிட்டால் [commitment] அவர் அது தன் டிபார்ட்மென்ட் வேலையாக  இல்லாவிட்டாலும் தேவைப்பட்டால் இரவு முழுக்க விழித்திருந்து அந்த வேலையை முடிக்க உதவுவார். மறுநாள் காலையில் வந்து பாராட்டுக்காக நிற்பார். உண்மையான மனம் நிறைந்த பாராட்டு இவரது விழிப்பையும் சோர்வையும் போக்கிவிடும்.

சவாலான பணிகள்

புதுமையும் ஆர்வமும் இல்லாத வேலையில் மேஷ ராசிக்காரர் இருக்க மாட்டார். அரம்பத்தில் ஆர்வமாகப் பணி செய்யும் இவர் இடையில் சற்று தொய்வாக வேலை செய்கிறார்; காலதாமதமாக அலுவலகத்துக்கு வருகிறார் என்றால் இவருக்கு அந்த வேலையின் மீது பிடிப்பு குறைந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர் பி. ஏ படித்திருந்தால் எம். ஏ படித்தவர் செய்யக்கூடிய வேலையைத் தர வேண்டும். இவருக்கு இந்தி தெரியாது என்றால் இவரை இந்தி பேசும் மாநிலத்துக்கு விற்பனையாளராக அனுப்ப வேண்டும். அப்போது அதை ஆர்வமாக செய்வார். அந்த மாநிலங்களில் சிறப்பாக சில வருடங்கள் வேலை செய்த பின்பு ‘‘நீங்கள் போனால் தான் ஆந்திராவில் வேலை நடக்கும்’’ என்று சொல்லி அவரை தெலுங்கு பேசும் மாநிலத்துக்கு மாற்றிவிட வேண்டும்.  அவர் உற்சாகமாக அங்குச்  சென்று அந்த வேலையை சிறப்பாக முடிப்பார். மேஷ ராசிக்காரர் புதுமை விரும்பி என்பதால் ஒரே மாதிரி வேலை செய்ய இவருக்கு பிடிக்காது. யாருக்கும் அடிமையாக இவர் வேலை செய்ய மாட்டார். ஜாலியாக உட்கார்ந்துகொண்டு அடுத்தவரை வேலை ஏவுவதையும் இவர் விரும்பமாட்டார். எந்த வேலையையும் தானே தன் சொந்த பொறுப்பில் எடுத்து  சிறப்பாக செய்து முடிக்கவே விரும்புவார். முதலாளியின் திருப்திக்காக வேலை செய்வது இவருக்குப் பிடிக்காது.மேஷ ராசிக்காரர் செய்த வேலையைச் சரியில்லை என்று சொல்லி வேறு யாரையாவது திரும்பச் செய்யச் சொல்வது  இவருக்கு அறவே பிடிக்காது. வேறு நிறுவனம் பார்க்க ஆரம்பித்து விடுவார்.

ராஜ விசுவாசி

மேஷ ராசிப் பணியாள் ஒரு குட்டி முதலாளி [leader]போலவே தன் பணித்தளத்தில் நடந்துகொள்வார். எல்லோரையும் வேலை வாங்குவார். யாராவது வெட்டி கதை பேசிக்கொண்டிருந்தால் கண்டிப்பார். நிறுவனத்தைப் பற்றியோ முதலாளியைப் பற்றியோ அவதூறு பேசுவதை கண்டிப்பார். ‘‘இவர் கொடுக்கும் சம்பளத்துக்கு இதுக்கு மேல வேலை செய்வாங்களா’’ என்று யாராவது கேட்டால் அவருடன் சண்டை போட்டு முதலாளியிடம் அவரை அழைத்துச்  சென்று நேரில் புகாரளித்து அவரை வேலையை விட்டே அனுப்பிவிடுவார். அனைவரும் தன்னைப் போல விசுவாசமாக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

போராளி

முதலாளி சரியில்லை என்றால் துணிந்து எதிர்த்துப் பேசுவார். ஆள் சேர்த்துக்கொண்டு போராட்டம் நடத்துவார். அதன் விளைவு என்னவாக இருந்தாலும் பின்வாங்க  மாட்டார். இவருடன் இருப்பவர்கள் சோர்ந்து போனாலும் இவர் புது புது உத்திகளைப் பின்பற்றி உத்வேகத்துடன் போராட்டத்தைத் தொடர்வார். ஆனால் இவருக்கு என  சில நல்லவர்கள் துணை எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.சில மேஷ ராசிக்காரருக்கு வாழ்க்கையே எப்போதும் போராட்டக் களமாகத் தான் இருக்கும் எல்லாம் இவராக சேர்த்துக்கொள்வது தான். ஆனாலும்

சந்தோஷமாக தன் போராட்டத்தை நடத்துவார். settled life என்பதே இவரது வாழ்க்கையில் கிடையாது. தொண்ணூறு வயதானாலும் இவர் வேலை, தொழில், புதுமை நாட்டம், என புதிது புதிதாக எதையாவது செய்துகொண்டே இருப்பார். சில போராட்ட வலி முறைகளை வகுத்து தருவதில் கெட்டிக்காரர். இளம் தலைமுறையினரை உற்சாகப் படுத்தி நெறிப்படுத்துவார். வியுகங்கள் அமைப்பதில் கெட்டிக்காரர். நெகட்டிவான சிந்தனையோ பேச்சோ இவரிடம் இருக்காது.

புதுப்புது வேலை

மேஷ ராசிக்காரருக்கு வேலை குறைவாக இருக்கிறது என்றால் நல்லது தானே ‘‘குறைந்த வேலை நிறைய சம்பளம்’’ என்று சந்தோஷப் படமாட்டார். உடனே அந்த வேலையை விட்டுப் போய்விடுவார். வேலைக்குச்  சேர்வதில் இருக்கும் ஆர்வம் வேலையை விடுவதிலும் இவருக்கு இருக்கும். புதுமை நாட்டம் அதிகம் என்பதால் பொறுப்பு இருந்தால் மட்டுமே இவர் ஒரு இடத்தில் இருப்பார். இல்லையென்றால் புது புது வேலைகளுக்குப் போய்க்கொண்டே இருப்பார்.

பல் துறைகளிலும் இவருக்கு அறிவு இருக்கும். டெக்னிகல் அறிவை விட மனிதர்களை அறியும் அறிவு இவருக்கு அதிகம். ஆலோசகர் [ADVISOR] ஆற்றுனர் [COUNSELLOR] ஆசிரியர், சண்டை வாத்யார் அல்லது ஆசான் போன்ற பணிகளுக்குச்  சிறந்தவர். நல்ல யோசனைகளை சொல்வார். இவர் பேசுவதை பார்த்தால் அருகில் இருந்து கேட்டுவிட்டு பேசுவதை போல இருக்கும்.  அப்படியே வேறிடத்தில் நடந்த உரையாடலை இவர் இங்கிருந்தே சொல்வார். . ஒரு உரையாடலின் தொடக்கத்தை சொன்னால் இவர் அதன் போக்கையும் முடிவையும் சொல்லிவிடுவார். அந்தளவுக்கு MIND READING, FACE READINGஇல் கெட்டிக்காரர்.

மேம்பாடு மற்றும் லாபம்

தொழிலை மேம்படுத்துவதில் [promoter] பன்னிரு ராசிகளிலும் இவருக்கு நிகர் இவர் மட்டுமே எனலாம். மார்க்கெட்டிங் என்று எடுத்துக்கொண்டால் வேலை நேரம் என்றில்லாமல் பார்க்கும் மனிதர், போகும் இடம் என்று அனைத்து இடங்களிலும் மனிதர்களிடமும் அதையே பேசுவார். தன் உடல் பொருள் ஆவி என்ற மூன்றையும் அர்ப்பணித்து வேலை செய்வார். வேலை செய்வதில் கணக்கு பார்க்க மாட்டார்.  நஷ்டம் வந்தாலும் நிறுவனத்தை விட்டு போக மாட்டார். உடனிருந்து நம்பிக்கை அளிப்பார். இவரால் தோல்வி, நஷ்டம் என்பதை நினைத்து பார்க்கக் கூட இயலாது எனவே எப்படியாவது பாடுபட்டு தான் வேலை பார்க்கும் நிறுவனத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும் என்று சதா சிந்திப்பார். அதற்காக கடுமையாக உழைக்கவும் செய்வார்.

மேஷ ராசிக்காரரின் நண்பர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இவர் தனக்காக உழைப்பதை விட பிறருக்காக அதிகம் உழைப்பார். தன்னலம் பேணுவதை விட பிறர் நலம் பேணுவதில் அதிக அக்கறை உள்ளவர். மேஷ ராசிக்காரரை வேலை வாங்கவேண்டும் என்றால் அவருக்கு சாதாரணமான அல்லது அவர் படிப்புக்கு ஏற்ற வேலை வயதுக்கு ஏற்ற வேலை என்று எதையும் கொடுக்க கூடாது. அவருக்கு சவாலாக இருக்கும் வேலையை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அதை சாதித்துக் காட்டுவார். இது முடியாது என்று மற்றவர் சொல்வதை அவரிடம் ஒப்படைத்தால் அதை அவர் முடித்துக் காட்டுவார். அந்த வேலை அவருக்கு புதுமையாகவும் சவாலாகவும் இருக்க வேண்டும்.வருமானம் அதிகம் கிடைக்கும் வேலைகளுக்கு போகாமல் மன நிறைவு பெரும் வேளைகளில் இருப்பதே இவருக்குப் பிடிக்கும். வேலை செய்யும் இடத்தில் தனது  பேர் விளங்க வேண்டும் என்பதையே இவர் விரும்புவார். சுய லாப நட்டம் பார்க்காமல் வாழ்நாள் முழுக்க உண்மையாக உழைப்பார். மேஷ ராசிப் பணியாள் முதலாளிக்கு ஓரு வரப் பிரசாதம்.

(தொடரும்)

Related Stories: