புரட்டாசி மாத விசேஷங்கள்

புரட்டாசி 1, செப்டம்பர் 18, புதன் - சதுர்த்தி. மஹாபரணி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

புரட்டாசி 2, செப்டம்பர் 19, வியாழன் - பஞ்சமி. கிருத்திகை விரதம், வேளூர் கிருத்திகை, தருமை ஸ்ரீஷண்முகர் அபிஷேகம். வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் ஸ்ரீபாலமுருகன் தங்க ரதக் காட்சி.

புரட்டாசி 3, செப்டம்பர் 20, வெள்ளி - சஷ்டி. திருநாளைப்போவார். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன்

தங்கப் பாவாடை தரிசனம்.

புரட்டாசி 4, செப்டம்பர் 21, சனி - சப்தமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீவரதராஜ

மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

புரட்டாசி 5, செப்டம்பர் 22, ஞாயிறு - மத்யாஷ்டமி, மஹா வியதீபாதம். சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமியின் மேல் சூரிய ஒளி பொலிவுடன் படுவதை தரிசிக்கலாம்.

புரட்டாசி 6, செப்டம்பர் 23, திங்கள் - அவிதவாநவமி. திதித்வயம். பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு. சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

புரட்டாசி 7, செப்டம்பர் 24, செவ்வாய் - தசமி . வடலூரில் மாத பூசம் நட்சத்திர அமாவாசை. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

புரட்டாசி 8, செப்டம்பர் 25, புதன் - ஏகாதசி . கோவிந்தபுரம் ஸ்ரீபோதேந்திராள் ஆராதனை. மஹாளயம். கிருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமான் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.

புரட்டாசி 9, செப்டம்பர் 26, வியாழன் - துவாதசி , திரயோதசி . மஹாப்ரதோஷம். கெஜ கௌரி விரதம். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

புரட்டாசி 10, செப்டம்பர் 27, வெள்ளி - சதுர்த்தசி. மாதசிவராத்திரி. கேதாரவ்ரதஸமாப்தம். அருணந்திசிவாசார்யர் (அடியவர்) .

ஸ்ரீநெல்லை நெல்லையப்பர், ஸ்ரீகாந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.

புரட்டாசி 11, செப்டம்பர் 28, சனி - அமாவாசை. ஸர்வ மஹாளய அமாவாசை, மாஷாகௌரிவிரதம், திருவையாறு அமாதீர்த்தம், வேளூர் எதிர்காட்சி, ராமேஸ்வரம் வெள்ளி ரதம். சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் மஹா அபிஷேகம்.

புரட்டாசி 12, செப்டம்பர் 29, ஞாயிறு - பிரதமை. வேளூர் சீர்காழி, திருக்கடையூர், திருப்பனந்தாள் திருவையாறு தலங்களில் ஸ்ரீ அம்பாளுக்கு லக்ஷார்ச்சனை ஆரம்பம், தருமை மஹாலட்சுமி துர்க்காம்பிகை சந்நதியில் சதசண்டியக்ஞம் ஆரம்பம். ஸர்வ ஆலங்களில் நவராத்திரி உற்சவ ஆரம்பம். மதுரை மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு தர்பார் காட்சி.

புரட்டாசி 13, செப்டம்பர் 30, திங்கள் - துவிதியை . ஸ்ரீராமலிங்க வள்ளலார் திருஅவதார திருநட்சத்திரம். சந்திர தரிசனம்.சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் மாகேஸ்வரி அலங்காரம்.

புரட்டாசி 14, அக்டோபர் 1, செவ்வாய் - திருதியை, சுக்லபட்ச சதுர்த்தி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ஸ வாகனத்திலும் பவனி வரும் காட்சி.    

புரட்டாசி 15, அக்டோபர் 2, புதன் - சதுர்த்தி .  திருப்பதி ஏழுமலையப்பன் பகலில் சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பந்தல் அருளிய காட்சி.

புரட்டாசி 16, அக்டோபர் 3, வியாழன் - பஞ்சமி . திருவஹிந்திரபுரம் சுவாமி தேசிகர் சிம்ம வாகனம். பாதூர் கருடன்.  சுக்லபட்ச சஷ்டி. கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் திருவீதியுலா.

புரட்டாசி 17, அக்டோபர் 4, வெள்ளி - சஷ்டிவிரதம், தருமை ஸ்ரீமஹாலக்ஷ்மி துர்க்காம்பிகை சந்நதியில் நவதீப பூஜை. வில்வ விருட்ச பூஜை. திருமலை திருப்பதி சென்னை பைராகிமடம் கருட சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாஸப் பெருமாள் பவனி, தல்லா குளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராஜாங்க சேவை.

புரட்டாசி 18, அக்டோபர் 5, சனி - சப்தமி . ஸ்ரீரங்கம் தாயார் கருடசேவை. ஸரஸ்வதி ஆவாஹனம். சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம். குலசேகரப்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் அலங்காரக் காட்சி.

புரட்டாசி 19, அக்டோபர் 6, ஞாயிறு - அஷ்டமி. வேளூர் 3 தின சூரிய பூஜை ஆரம்பம், வேளூர் மகிஷாசுர சம்ஹாரம். ஆலயங்களில் மஹாநவமி. துர்க்காஷ்டமி, மதுரை மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.

புரட்டாசி 20, அக்டோபர் 7, திங்கள் - நவமி. சீர்காழி, திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு தலங்களில் ஸ்ரீஅம்பாளுக்கு லக்ஷார்ச்சனை பூர்த்தி, யக்ஞ சோபனந்திரவிய சமர்ப்பணம், திருக்கருகாவூர் கர்ப்ப ரக்ஷாகாம்பிகை தெப்பம். மஹாநவமி, ஆயுதபூஜை, ஸரஸ்வதி பூஜை, தருமை ஸ்ரீமஹாலக்ஷ்மி துர்க்காம்பிகை சந்நதியில் சதசண்டி யாகம். ஏனாதி நாயனார் குரு பூஜை.. தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய்த் தாழி சேவை.

புரட்டாசி 21, அக்டோபர் 8, செவ்வாய் - தசமி. ஏழுமலையான் ஸ்வர்ணதீபம், வேளூர் லக்ஷார்ச்சனை பூர்த்தி, தருமை ஸ்ரீமஹாலக்ஷ்மி துர்க்காம்பிகைக்கு சதசண்டி யக்ஞ கலசாபிஷேகம், சென்னை பைராகிமடம் சக்ர ஸ்நானம். விஜயதசமி, அம்புபோடுதல், திருவஹிந்திரபுரம் சுவாமி தேசிகர் ரத்தினாங்கி சேவை. திருவோண விரதம். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சூரஸம்ஹாரக் காட்சி.

புரட்டாசி 22, அக்டோபர் 9, புதன் - ஏகாதசி . ராமேஸ்வரம் உஜ்ஜையனி மகா காளி கரகம் புறப்பாடு. சுக்லபட்ச ஸர்வ ஏகாதசி. கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் கஜலட்சுமி வாகனத்தில் பவனி.

புரட்டாசி 23, அக்டோபர் 10, வியாழன் - துவாதசி. நரசிங்கமுனையரையர். கோ துவாதசி. கரூர் தான்தோன்றி கல்யாண வேங்க டேசப்பெருமாள் பின்னங்கிளி வாகனத்தில் பவனி.    

புரட்டாசி 24, அக்டோபர் 11, வெள்ளி - திரயோதசி. மகா பிரதோஷம்.

புரட்டாசி 25, அக்டோபர் 12, சனி - சதுர்த்தசி. திருக்கடையூர் ஸ்ரீகாலசம்ஹாரமூர்த்தி அபிஷேகம். நடராஜர் அபிஷேகம். கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் துளசி பிருந்தாவனம். ஊஞ்சல் உற்சவ சேவை.

புரட்டாசி 26, அக்டோபர் 13, ஞாயிறு - பௌர்ணமி. திருவாரூர்  தேவேந்திர பூஜை, திருவையாறு முதலிய தலங்களில் நிறைபணிவிழா. ஸந்தான கோபால விரதம். கோமதி பூஜை. மதுரை ஸ்ரீகூடலழகர் பாற்குடக் காட்சி.

புரட்டாசி 27, அக்டோபர் 14, திங்கள் - பிரதோஷம். அப்பய்யதீக்ஷிதர் ஜயந்தி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு கண்டருளல். தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு.

புரட்டாசி 28, அக்டோபர் 15, செவ்வாய் - துவிதியை. உருத்திர பசுபதியார் குருபூஜை. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.

புரட்டாசி 29, அக்டோபர் 16, புதன் - திருதியை . ஸ்ரீரங்கம் டோலோற்சவம் ஆரம்பம். கிருத்திகை. கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.

புரட்டாசி 30, அக்டோபர் 17, வியாழன் - திருதியை. வேளூர் கிருத்திகை. தென்காசி ஸ்ரீ உலகம்மை திருவீதியுலா, திருத்தணி, சுவாமிமலை இத்தலங்களில் முருகப் பெருமான் புறப்பாடு.

Related Stories: