கருப்பு உளுந்து வடை

தேவையான பொருட்கள்

தோல்(கருப்பு)உளுந்து - 1 கப்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - 1 சிறுதுண்டு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

உளுந்தை 2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.. உளுந்தை தோலுடனே அதனுடன் உப்பு+இஞ்சி+சோம்பு சேர்த்து நைசாக அரைக்கவும். வெங்காயம்+கறிவேப்பிலை,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி அரைத்த மாவில் கலந்து வடைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தோலுடனே அரைப்பதால் வடை நல்ல வாசனையாகவும்,சுவையாகவும் இருக்கும்.

Tags :
× RELATED சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ...