×

உயர்வான வாழ்வு அளிப்பான் உலகளந்தான்

திருத்து, நெல்லை

திருநெல்வேலி மதுரை சாலையில் உள்ளது தாழையூத்து அடுத்துள்ள ஆளவந்தான் குளம் பகுதியில் உள்ளது நெல்லைதிருத்து கிராமம். இங்கு சுமார் எழுநூறு யாதவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு யாதவர்கள் குடியேறிய போது அவர்களது குலக்கடவுளான கிருஷ்ணனுக்கு கோயில் கட்ட முடிவு செய்தனர். அதன் பொருட்டு நம்பூதரிகளை வரவழைத்து பிரசன்னம் பார்த்தனர். அப்போது இவ்விடம் கோயில் கட்டலாம். கோயிலில் சிலை அமைக்க கூடாது என்று வந்தது. உடனே கோயில் கருவறையில் பாமா, ருக்மிணியுடன் கூடிய நவநீதகிருஷ்ணன் நின்ற நிலையில் உள்ள வண்ண ஓவியப்படம் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு தான் பூஜை நடைபெறுகிறது. சிறிய அளவில் இருந்த இக்கோயில் முன்பு கிருஷ்ணனின் லீலைகள் வண்ண சிற்பங்களாக வடிவமைக்கப்பட்ட கல் மண்டபம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. அதன் பின்னர் இப்பகுதியில் இருந்த குடிசை வீடுகள் யாவும் மாடிகளாக உருமாறியது. அந்த ஊரைச்சேர்ந்தவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது. இக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி, ஏகாதசி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

ச.சுடலை ரத்தினம்
படங்கள்: ரா.பரமகுமார்.

Tags :
× RELATED சுந்தர வேடம்