இந்த வாரம் என்ன விஷேஷம்?

ஆகஸ்ட் 17, சனி - திருதியை. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு. வடமதுரை ஸ்ரீசௌந்திரராஜப் பெருமாள் வஸந்த உற்ஸவம்.

Advertising
Advertising

ஆகஸ்ட் 18, ஞாயிறு - திருதியை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி  எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.

ஆகஸ்ட் 19, திங்கள் - சதுர்த்தி.  திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், வடமதுரை ஸ்ரீசௌந்திரராஜப் பெருமாள் விடாயாற்று உற்சவம்.

 

ஆகஸ்ட் 20, செவ்வாய் - பஞ்சமி. திருச்செந்தூர் ஆவணி உற்சவ கொடியேற்றம், திண்டுக்கல் சாது கருணாம்பிகை குருபூஜை. சுவாமி மலை ஸ்ரீமுருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

ஆகஸ்ட் 21, புதன் - சஷ்டி. திருச்செந்தூர், பெருவயல் இத்தலங்களில் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவாரம்பம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

ஆகஸ்ட் 22, வியாழன் - சப்தமி. திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் சிங்க கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் புறப்பாடு கண்டருளல். சுவாமி மலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஆகஸ்ட் 23, வெள்ளி - அஷ்டமி. ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி, தருமை ஸ்ரீஷண்முகர் அபிஷேகம், வேளூர் கிருத்திகை. கிருத்திகை, ஸ்ரீ வைகானஸ ஜெயந்தி.

Related Stories: