வெல்லச்சீடை

தேவையான பொருட்கள்

Advertising
Advertising

சிவக்க வறுத்தரைத்த  அரிசி மாவு -1கப்

வறுத்தரைத்த உளுத்தமாவு -3 டீஸ்பூன்

வெல்லத்தூள்—அரை கப்.   [பாகு வெல்லமாக]

பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் -2 டேபிள்ஸ்பூன்

வெள்ளை எள் -அரை டீஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி - சிறிது

நெய்-2 டீஸ்பூன். சீடையைப் போட்டெடுக்க எண்ணெய்

செய்முறை: ஒரு கப் தண்ணீரில் வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். தீயை நிதானப் படுத்தி அரிசி மாவைக் கொட்டிக் கிளறி இறக்கவும். ஆறியவுடன் தேங்காய்,  உளுத்தமாவு,நெய்,  எள், ஏலப்பொடி சேர்த்துப்  பிசையவும். பிசைந்த மாவை கோலிகளாக ஒரே அளவில் உருட்டி சுத்தமான துணியில்  பரப்பிப் போடவும். 15,நிமிடங்கள் கழித்து சீடைகளை காயும் எண்ணெயில் சிறிது,சிறிதாகப் போட்டு கரகரப்பாக வேகவிட்டு எடுக்கவும்.

Related Stories: