அரசாங்க வேலை பெற முயல்பவர்கள் செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு!!

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள். ஒரு பெண் திருமணம் ஆகியும் தன்னால் குழந்தை பெற முடியாமல் போனால் எவ்வாறு மனதளவில் துடிப்பாளோ, அத்தகைய மன வேதனையை வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்ற ஒரு ஆணும் கொண்டிருப்பார். எந்த ஒரு வேலையும் சிறந்தது தான் என்றாலும் நம் நாட்டில் இருக்கும் மக்களின் அரசாங்க வேலை தான் பாதுகாப்பானதும், உயர்வானதும் என்கிற ஒரு மனநிலையை பெற்றிருக்கின்றனர். அத்தகைய அரசாங்க உத்தியோகம் அனைவருக்குமே கிடைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதே எதார்த்தம். எனினும் இங்கே அரசாங்க வேலை பெற முயல்பவர்கள் செய்யக்கூடிய ஒரு ஆன்மீக பரிகார முறையை தெரிந்து கொள்ளலாம்.

Advertising
Advertising

வேலையில்லா திண்டாட்டம் என்பது உலகின் அனைத்து நாடுகளிலும் இருக்கவே செய்கிறது. அதிலும் நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் இருப்பதால் ஒரு வேலைக்கு பல்லாயிரக்கணக்கானோர் போட்டியிடுகின்ற நிலையே இருக்கிறது. அதிலும் பல நன்மைகளை தரக்கூடிய அரசாங்க வேலைக்கு பல லட்சக் கணக்கில் வேலைவாய்ப்பற்ற நபர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதற்கான தேர்வுகளையும் எழுதுகின்றனர். இருந்தாலும் ஒரு மனிதரின் தீவிர முயற்சியும், அவரின் கர்மபலன்களின் நற்பயன்கள் அடிப்படையிலேயே அவருக்கு அரசாங்கம் வேலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.

மேலும் நவகிரகங்களில் ஒரு மனிதனுக்கு அரசாங்கத் துறையில் பணி, பதவி உயர்வுகள் போன்றவை ஏற்படுவதற்கு அவரது ஜாதகத்தில் சூரியன் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம். அப்படி ஜாதகத்தில் சூரிய கிரகத்தின் நல்ல நிலையில் இருந்தால், அனேகமாக அந்த ஜாதகருக்கு பிறரை நிர்வகிக்கும் வகையிலான அரசாங்க வேலை கடின முயற்சிகள் மேற்கொள்ளலேயே கிடைத்துவிடும்.

ஆனால் அனைவருக்குமே ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருக்கும் என்பதை கூறுவதற்கில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இறைவழிபாடும், அவர்களின் விருப்பத்திற்கு தகுந்த ஆன்மீக பரிகாரங்கள் மட்டுமே கை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே அரசாங்க உத்தியோகம் மற்றும் வேலைகளில் பதவி உயர்வு பெற விரும்புபவர்கள் சர்வ சக்தியாக விளங்கும் அம்மன் அல்லது அம்பாள் கோயிலில் கீழ்கண்ட பரிகாரத்தை மேற்கொள்வதால் அவர்களின் விருப்பம் நிறைவேற அகிலத்தை காக்கும் அன்னை அருள் புரிவாள்.

பொதுவாக அம்மன் அல்லது அம்பாள் தெய்வ வழிபாடு நமது கோரிக்கைகள் விருப்பங்கள், அனைத்தையும் நிறைவேற்ற வல்லதாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று உங்கள் வீட்டிற்கருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வேலை பெற முயலும் நபரின் பெயர் மற்றும் ராசி, நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து, அம்மனுக்கு இளம் ஆரஞ்சு நிற புடவை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். அம்மன் வழிபாட்டிற்குரிய ஆடி மாதத்தில் இந்த பரிகாரத்தை செய்வது உறுதியாக பலன் கொடுக்கும் என்பது பெரியோர்களின் கருத்தாக உள்ளது.

Related Stories: