ஆடித்தபசு ஏன் கொண்டாடுகிறோம் காரணம் தெரியுமா?

ஆடித்தபசு - 13.08.2019

Advertising
Advertising

ஆடித்தபசு திருவிழாவை மக்கள் கொண்டாட என்ன காரணம் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம். சங்கரன் கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா. ’ஹரியும் அரனும் ஒன்றே’ என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன், அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார். இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 'தபசு' என்றால் “தவம்’ அல்லது “காட்சி’ எனப்பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாளாகும். இந்த விழா, 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் அம்பாளுக்குக் காட்சி தருகிறார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார். திருமணம், மகப்பேறு வேண்டும் பெண்கள், ஆடித்தபசு திருநாளுக்கு முதல்நாள் நீராடி, ஈரப் புடவையுடன் கோயில் பிராகாரத்தில் படுத்து விடுவார்கள். இரவு கனவில் அம்மன் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Related Stories: