தியாகத்தை பறைசாற்றும் பக்ரீத்

ஒவ்வொரு பண்டிகையும் ஒருவித ‘அர்த்தம்’ தோய்ந்தே இருக்கின்றன. மற்றைய பெருநாட்களை விட, இந்த ‘ஹஜ்’ திருநாள் கொண்டாட்டத்தில் கூடுதல் அர்த்தம் பொதிந்திருக்கிறது. இறைக்கட்டளைக்கு பணிந்து, பெற்ற மகனையே பலியிடத் துணிந்த இப்ராகிம் நபிகளாரின் தியாகம் இத்திருநாளில் நினைவு கூறப்படுகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் இறைவன் வழங்கிய அருட்கொடைகளை நினைவு கூர்ந்து, அந்த வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் இத்திருநாள் இருக்கிறது. ஏழை, எளியோர், தேவையுடையோருக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்த நிறைவில் மனம் மகிழ்ந்து கொண்டாடும் மகத்தானதாகவும் இந்நாள் இருக்கிறது.

Advertising
Advertising

இந்நாளில் ஆட்டை அறுத்து நிறைவேற்றும் ‘குர்பானி’ நிகழ்வானது,  இறைவனின் நெருக்கத்தை, இறையச்சம் அதிகப்படுத்துதலை வழங்குகிறது.‘‘யார் (தானதர்மம்) கொடுத்து (தம் இறைவனை) அஞ்சி நல்லவற்றை உண்மை என (அவை நல்லவையென்று) ஏற்கின்றாரோ, அவருக்கு நாம் இலகுவான பாதைகளை எளிதாக்குவோம்,’’ என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் அறிவிக்கிறான். இந்த ஹஜ் பெருநாளில் தகுதி இருப்போரே ‘குர்பானி’யை நிறைவேற்றலாம்.

‘‘அல்லாஹ் எந்த ஆத்மாவிற்கும் அதனுடைய சக்திக்கு உட்பட்டதைத் தவிர (அதிக) சிரமம் கொடுப்பதில்லை,’’ என்கிறது திருக்குர்ஆன். அதாவது, 612 கிராம் வெள்ளி அல்லது அதன் மதிப்பிலான ரொக்கப்பணம் அல்லது சொத்துகள், அன்றைய அத்தியாவசியத் தேவைகள் போக மீதமிருந்தால், அவர்கள் ‘குர்பானி’ தரலாம்.  ஜகாத் என்ற ஏழைவரி வழங்கும் கடமை இருப்போருக்கே, இதுவும் கட்டாயமாகிறது. கடன் வைத்திருப்போர், முதலில் அந்தக் கடனை திருப்பி அளிப்பது, ‘குர்பானி’ கொடுப்பதை விடச் சிறந்ததாகும்.

Related Stories: