இஸ்லாமியர்களின் ‘ஹஜ்’ பயணம்!

உலகின் அத்தனை இஸ்லாமிய மக்களையும் ஓரிடத்தில் திரளச் செய்கிற அற்புத ஒற்றுமை மாநாட்டை ‘ஹஜ்’ தருகிறது. வசதி படைத்தோர், வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையேனும் அரேபியா சென்றுசென்று, இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக்கடமையான ‘ஹஜ்’ கடமையை நிறைவேற்ற வேண்டும். இந்த ஹஜ் நாட்களில் ஒவ்வொரு நிகழ்வும், அக்காலத்து, இப்ராகிம் நபிகளாரின் குடும்பத்தினர் அந்த பாலைவெளியில் தவித்துக் கிடந்ததன் வெளிப்பாடாகவே இருக்கிறது.

Advertising
Advertising

‘ஹஜ்’ என்றால் ‘புறப்படுதல்’ அர்த்தம் தருகிறது. அரேபிய மண்ணிற்கு புறப்படுகிற ஹஜ் பயணிகள், இந்த ஹஜ் இக்கடமைக்கென, அங்கு ‘இஹ்ராம்’ என்ற உடை அணிகின்றனர். புனித ‘கஅபா’வை வலம் வருகின்றனர். சபா  மர்வா என்ற இரண்டு மலைகளுக்கு இடையில் தொங்கோட்டம் ஓடுகின்றனர். மினாவில் தங்குதலும், அரபா மைதானத்தில் பகல் முழுவதும் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடுதலும், முத்தலிபா என்ற இடத்தில் இரவு தங்குதலும், மீண்டும் மினா கூடாரத்திற்கு  வருகை தருதலும் சைத்தான்கள் மீது கல்லெறிதலும் நடக்கிறது.

இதன் பகுதியாக ‘குர்பானி’ எனும் பலியிடுதலும் இருக்கிறது. ஆண்கள் மட்டும் தனது தலைமுடிகளை சிரைத்துக் கொள்ளுதலும், மீண்டும் ‘கஅபா’வை வலம் வந்து ‘ஹாஜி’ என்ற அந்தஸ்துடன் தாயகம் திரும்புவதும் நடக்கிறது. பாவங்கள் போக்கும் நாட்களாக மட்டுமல்ல, தியாகத்தின் மேன்மை உணர்ந்து இறையச்சத்துடன் அன்று பிறந்த பாலகராகும் அதிசயத்தையும் இந்த ‘ஹஜ்’ கடமை தந்து போகிறது.

Related Stories: