பக்ரீத் பண்டிகை: குர்பானி கொடுக்கப்படுவதற்கான அவசியம்

இஸ்லாமியர்கள் கொண்டாடும் பெருநாட்களில் பக்ரீத் பண்டிகை ‘தியாகத் திருநாள்’ பெருமைக்குரியது. இறைக்கட்டளைக்கு அடிபணிந்து தன் மகன் இஸ்மாயிலையே அறுத்துப் பலியிடத் துணிந்த இப்ராகிம் நபிகளாரின் இறைபக்திக்கான தியாகத்தின் ஆதார அடையாளமாக இப்பெருநாள் விளங்குகிறது.எனவேதான், இந்நாளில் ஆடு, மாடு பிராணிகளை முஸ்லிம்கள் அறுத்துப் பலியிடுவது(குர்பானி) நடக்கிறது. ‘‘அந்த குர்பானி பிராணியின் மாமிசமோ, ரத்தமோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை. மாறாக இறைவனை சென்றடைவதெல்லாம், உங்களின் பயபக்தி மட்டுமே’’ என்கிறது திருக்குர்ஆன். இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் பிறையின் 10, 11, 12 ஆகிய இம்மூன்று நாட்களில்தான் இந்த ‘குர்பானி’க்கு அனுமதியும், இது ஒரு வணக்கமாகவும் இருக்கிறது.

Advertising
Advertising

இந்நாட்களில் தங்கள் வீடுகளில் ஆடு, மாடு போன்றவற்றை இறைவனின் பெயரால் இஸ்லாமியர்கள் அறுத்துக் குர்பானி செய்கின்றனர். குர்பானி செய்யப்படும் விலங்கின் இறைச்சி மூன்று சம பங்குகளாக பிரிக்கப்படுகிறது. இதில் முதல் பங்கு அண்டை வீட்டார்களுக்கும், அத்தனை உறவுகளுக்கென ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் ‘உறவுகளைக் கொண்டாடும்’ உன்னதப் பண்பாட்டை இத்திருநாள் போதிக்கிறது. இரண்டாவது பங்கு முழுமையாக ஏழைகளுக்கு போய்ச் சேர வேண்டும். பண்டிகை நாளில் அத்தனை ஏழைகளும் சமைத்து உண்டு களித்து மகிழ்வுறுவதை இந்த பங்கீடு வலியுறுத்தி நிற்கிறது. மூன்றாவது பங்கை, வீட்டார் எடுத்துக் கொள்ளலாம். ஏழைகளை இன்புறச் செய்வது, அறன்களில் மகத்தானது. இறைவனுக்கு விருப்பமானது. பக்ரீத் பண்டிகையும் இந்த இறைவிருப்பத்தை, மகத்தான அறத்தை நிறைவேற்றித் தருகிறது.

Related Stories: