பக்ரீத் பிறந்த கதை!

இஸ்லாம் ‘ஐந்து கடமைகள்’ என்ற தூண்களைக் கொண்டிருக்கிறது. இவ்வகையில்  முதலில் ‘கலிமா’ என்கிற இறை நம்பிக்கை. இரண்டாவதாக, தினமும் ஐவேளைத் தொழுகை. மூன்றாமிடத்தில் ரமலான் மாதத்தின் முப்பது நோன்புகள். நான்காவதாக தன் வருவாயில் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்கு வழங்கும் ‘ஜக்காத்’. ஐந்தாம் கடமையாக இருக்கிறது வசதி படைத்தோருக்கான ‘ஹஜ்’ பயணம். முஸ்லிம்களின் மகத்தான இந்த ஐம்பெரும் கடமைகளில், இறுதிக் கடமையை நிறைவேற்றும் புனித காலமான இந்த ‘ஹஜ்’ மாதத்தில் கொண்டாடும் மகத்தான விழாவாக ‘பக்ரீத்’ எனும் ஹஜ் பெருநாள் இருக்கிறது. இப்பண்டிகையை ‘தியாகத் திருநாள்’ என்கிறோம். இறைத்தூதரான இப்ராகிம் நபிகளார், கனவில் கண்ட இறைக் கட்டளைக்கு பணிந்து.

Advertising
Advertising

மனைவி ஹாஜிராவுடன், மகன் இஸ்மாயில் விருப்பத்தினையும் பெற்று, தவமிருந்து பெற்ற தனது ஒரே மகனை அறுத்துப் பலியிடத் துணிந்தார். இறைவன் மீதான ஆழ்ந்த பற்றின் நம்பிக்கை வெளிப்பாட்டைக் காட்டிய இப்ராகிம் நபிகளாரைக் கண்ட இறைவன், அப்போது ஒரு ஆட்டை பலியிட வைத்து இஸ்மாயிலை காப்பாற்றியது என இப்பண்டிகைக்கென ஒரு தியாக வரலாறு இருக்கிறது.‘நம்புவோரை நாயகன் கைவிடுவதில்லை’ எனும், உண்மையை உரக்கச் சொல்கிற இந்நாளை,  இப்ராகிம் நபிகளாரின் தியாகத்தையும் நினைவு கூறும் விதத்தில் முஸ்லிம்கள் ஆட்டைப் பலியிட்டுக் கொண்டாடுகின்றனர். நம்மூர்களில் ‘பக்ரு’ என்றால் ‘ஆடு’ என்றும், ‘ஈத்’ எனில் ‘பெருநாள்’ பொருளிலும் இந்நாளை ‘பக்ரீத்’ என்றழைக்கின்றனர்.

Related Stories: