இந்த வாரம் என்ன விசேஷம்?

ஆகஸ்ட் 10, சனி  -  குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. இன்று கருட தரிசனம் நன்று. கலிய நாயனார், கோட்புலி நாயனார் குரு பூஜை.  

Advertising
Advertising

ஆகஸ்ட் 11, ஞாயிறு - ஸர்வ ஏகாதசி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் ரதோற்ஸவம். மயிலாடுதுறை ஸ்ரீசியாமளாதேவி புஷ்பாஞ்சலி, ஆடி உற்சவம், மடிப்பாக்கம் குபேரநகர் சீதளாதேவி கோயில் குருஜி அருளாற்றல், பழநி லட்சார்ச்சனை ஹோமம்.

ஆகஸ்ட் 12, திங்கள் - இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் புறப்பாடு. சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் ஸப்தாவரணம். சுக்லபக்ஷ (ஸோம) மஹாபிரதோஷம்.

ஆகஸ்ட் 13, செவ்வாய் - வட மதுரை ஸ்ரீசௌந்திரராஜப் பெருமாள் திருக்கல்யாண வைபவம். குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.

பட்டினத்தார் (அடியவர்). வேளூர் ஸ்ரீதுர்காம்பிகை புஷ்பாஞ்சலி, ஸ்ரீரங்கம் ஆடி 28ம் பெருக்கு.

ஆகஸ்ட் 14, புதன்  - பௌர்ணமி. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் பவித்திர உற்ஸவம். ரிஷப  வாகன ஸேவை. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருவீதியுலா. திருவோண விரதம். வேளூர் பவித்ரோத்சவம் பூர்த்தி,

ஆகஸ்ட் 15, வியாழன் - ஆவணி அவிட்டம்.  பூர்வக ருக், யஜூர் உபாகர்மா. ஹயக்ரீவ ஜயந்தி, ரக்ஷாபந்தனம். ரிக் உபாகர்மா, திருப்பனந்தாள் ஸ்ரீவீரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை, வேளூர் ஸ்ரீ முத்து குமாரசுவாமிகள் மாகேசுவர பூஜை. காஞ்சி ஸ்ரீதேவராஜஸ்வாமி ஆடி கருடன், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோயிலில் அருணகிரி நாதர் விழா.

ஆகஸ்ட் 16, வெள்ளி - காயத்ரி ஜபம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ஸப்தாவரணம். அவிநாசி  ஸ்ரீகருணாம்பிகை அம்மனுக்கு விசேஷ வழிபாடு. ஊஞ்சல் உற்ஸவக் காட்சி. ச்ராவண பஹூள ப்ரதமை. பழநி  பெரியநாயகியம்மன் மகாபிஷேகம் வெள்ளி தேர். தருமை ஸ்ரீமஹாலக்ஷ்மி துர்க்காம்பிகை சந்நதியில் திருவிளக்கு பூஜை.

Related Stories: