×

தமிழில் இயக்குனர் ஆனார் மலையாள நடிகர்

சென்னை: மலையாள நடிகர் ஆதம் சமர், தமிழில் ‘சீன் நம்பர் 62’ படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். அவர் கூறியது: மலையாள டிவி சீரியல்களில் பிசியாக நடித்து வந்தேன். எனக்கு தமிழ் மீது அதிக பற்று. இயக்குனர் ஆக வேண்டும் என்பது ஆசை. தமிழில் வித்தியாசமான படங்கள் உருவாகுவதால் இங்கு படங்கள் செய்ய ஆர்வமாக இருந்தேன்.

இதற்காக கோவைக்கு வந்து ஒரு வருடம் அங்கேயே தங்கி, தமிழ் கற்றேன். பிறகு ‘சீன் நம்பர் 62’ படத்தின் கதையை உருவாக்கினேன். மலையாள தயாரிப்பாளர் வேணுஜி ராமிடம் கதையை கூறினேன். அவரும் இந்த கதை, தமிழ் சினிமாவுக்கு பொருந்தும் என்பதை புரிந்து படம் தயாரிக்க முன்வந்தார். படத்தின் 62வது காட்சிதான் கிளைமாக்ஸ்.

அது வித்தியாசமாக இருக்கும். கதையின் போக்கை மாற்றும். சைக்காலஜிக்கல் திரில்லர் கதையிது.38 நாட்களில் இந்த படத்தை கொடைக்கானல், புதுச்சேரியில் படமாக்கினோம். அமல்தேவ், ராஜ்பால், கோகிலா கோபால் உள்ளிட்டோர் நடித்தனர். படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஓடிடியில் ஒளிபரப்ப பேச்சு நடக்கிறது. அடுத்ததாக தமிழ் படம் இயக்குகிறேன். ஸ்கிரிப்ட் வேலைகள் நடக்கிறது.

Tags : CHENNAI ,Adam Samar ,
× RELATED பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது: சென்னை ஐகோர்ட் கருத்து