×

திரில்லர் பாணியில் மெஸன்ஜர்

சென்னை: பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் தற்போது சார் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. தற்கொலைக்கு முயலும் ஸ்ரீராம் கார்த்திக்கை பெண் ஒருவர் காப்பாற்றுகிறார். ஆனால் அந்த பெண் தான் ஏற்கனவே இறந்துவிட்டதாக மெஸன்ஜரில் கூறுகிறார். அவர் யார், எது உண்மை என்பதை திரில்லுடன் சொல்கிறது படம். பால கணேசன், ஒளிப்பதிவு. பிரசாந்த், படத்தொகுப்பு. அபு பக்கர் இசை.

Tags : B. Vijayan ,PVK Film Factory ,Sriram Karthik ,
× RELATED டப்பாங்குத்து விமர்சனம்