×

பேஸ்புக் மெசேஞ்ஜரில் வந்த பேய்

‘கன்னி மாடம்’, ‘சார்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஸ்ரீராம் கார்த்திக் நடித்துள்ள படம், ‘மெசேஞ்ஜர்’. மற்றும் மனீஷா ஜஸ்னானி, பாத்திமா நஹீம், வைஷாலி ரவிச்சந்திரன், லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ‘ஜீவா’ ரவி, யமுனா, கோதண்டன், கூல் சுரேஷ், ராஜேஸ்வரி நடித்துள்ளனர். பி.வி.கே பிலிம் பேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி ரமேஷ் இலங்காமணி இயக்கியுள்ளார்.

இவர், இயக்குனர்கள் பத்ரி, ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். பால கணேசன் ஒளிப்பதிவு செய்ய, அபு பக்கர் இசை அமைத்துள்ளார். தக்‌ஷன், பிரசாந்த் பாடல்கள் எழுதியுள்ளனர். விக்கிரவாண்டியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஐடி கம்பெனி ஊழியர் ஸ்ரீராம் கார்த்திக், காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.

அவரது பேஸ்புக் மெசேஞ்ஜரில் ஒரு பெண் மெசேஜ் செய்து அதை தடுக்கிறாள். அவளுக்கு எப்படி தான் தற்கொலை செய்ய இருப்பது தெரியும் என்று அவளிடம் மெசேஜ் செய்து ஸ்ரீராம் கார்த்திக் கேட்க, அதற்கு அந்தப் பெண், தான் இறந்து விட்டதாக சொல்லி அதிர வைக்கிறார். இறந்த பெண் எப்படி ஒரு உயிரை காப்பாற்றினார் என்பது மீதி கதை.

Tags : Sriram Kartik ,Manisha Jasnani ,Fatima Nahim ,Vaishali Ravichandran ,Livingston ,Priyadarshini Rajkumar ,Jeeva' Ravi ,Yamuna ,Godandan ,Cool Suresh ,Rajeshwari ,B. V. K ,
× RELATED டப்பாங்குத்து விமர்சனம்